திரும்பவும் கேவலமான வேலையை ஆரம்பிக்கிறாரா பாலா.. வெளியான உண்மை..
தமிழில் பல இயக்குனர்கள் கலைஞர்களின் நடிப்பை வரவழைக்க கண்டிப்போடு நடந்து கொள்வது வழக்கம். ஆனால் விசித்திர இயக்குனராக நடிகர் நடிகைகளின் நடிப்பை கொண்டு வர அடித்து கொடுமைப்படுத்துவதாக பலர் கூறி வந்தனர்.
சமீபத்தில் பிதாமகன் தயாரிப்பாளர் 25 லட்சம் பணத்தை பாலா ஏமாற்றிவிட்டதாகவும் வணங்கான் படத்தில் இரு நாட்கள் நடித்த துணை நடிகைக்கு சம்பளம் கொடுக்காமல் அடித்து உதைத்த விவகாரத்திலும் சிக்கினார்.
தொடர்ந்து பல பேரை ஏமாற்றி வந்த பாலா தற்போது வேறொரு சர்ச்சையிலும் சிக்கியிருக்கிறார். அதாவது அவர் பெயரில் பாலசுப்பிரமணியன் பழனிச்சாமி என்ற பெயர் கொண்ட இன்ஸ்டா கணக்கில் வாய்ப்பு கொடுப்பதாக கூறி மோசடி செய்து வந்துள்ளனர்.
இதனை தெரிந்த பாலா, போலியான கணக்கை என் பெயரில் ஆரம்பித்து புகைப்படங்கள் மற்றும் தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள் என்றும் படங்களில் நடிக்க ஆரம்வமுள்ள பெண்களிடம் தவறான நோக்கத்தில் குறுஞ்செய்திகள் அனுப்பியும் வாய்ப்பு தருவதாக நம்பிக்கை கொடுத்து ஆபாச புகைப்படங்களையும் கேட்பதாக சென்னை கமிஷ்னரிடம் புகார் அளித்துள்ளார்.
புகாரில், என் படத்தில் நடிப்பவர்களுக்கான தேர்வை உதவி இயக்குனர்கள் மற்றும் மேலாளர்கள் மட்டுமே நேரடியாக சென்று அணுகுவார்கள். இதுபோல் போலியான கணக்குகளில் வரும் செய்திகளை யாரும் நம்பி ஏமாற வேண்டாம் என்று கூறியுள்ளார்.