மீண்டும் மீண்டும் வலைவீசிய இயக்குனர் பாலா!! வேண்டவே வேண்டாம் என்று எஸ்கேப் ஆன 19 வயது நடிகை..
தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக திகழ்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்து பிரம்மிப்பில் ஆழ்த்தியவர் இயக்குனர் பாலா. வித்தியாசமான நடிப்பு, கதாபாத்திரம், எதார்த்தமான நடிப்பை கலைஞர்களிடம் இருந்து பெறுபவராக திகழ்ந்து வந்தார்.
ஆனால் ஒரு காலத்தில் ரொம்பவே கஷ்டப்பட்டு சாப்பாட்டு கூட வழியில்லாமல் கஷ்டப்பட்டு வந்தார். அதன்பின் அடுத்தடுத்த படங்களை இயக்கி மிகப்பெரிய இயக்குனராக திகழ்ந்தார். கடந்த ஆண்டு நடிகர் சூர்யாவை வைத்து வணங்கான் என்ற படத்தினை இயக்க ஆரம்பித்தார்.
அப்படத்தினை பல கோடி செலவில் சூர்யா தயாரிக்கவும் செய்தார். ஆனால், பாலா இழுத்தடித்ததாலும் செலவை பல கோடி வரைக்கும் கொண்டு சென்றதாலும் டார்ச்சர் தாங்காமல் சூர்யா படத்தினை விட்டு விலகிவிட்டார். அவரை தொடர்ந்து அருண் விஜய்யை வைத்து பாலா வணங்கான் படத்தினை இயக்கி வருகிறார்.
படத்தில் கதாநாயகியாக சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை கிருத்தி செட்டி நடித்து வந்துள்ளார். சூர்யா படத்தில் இருந்து விலகியதால் கிருத்தி செட்டியும் வணங்கான் படத்தில் இருந்து விலகிவிட்டார். பாலா சம்பளம் அதிகமாக கொடுக்கிறோம் என்று மீண்டும் மீண்டும் கிருத்தி செட்டியிடம் கூறிப்பார்த்தும் வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.
ஏற்கனவே படம் ஆரம்பித்து ஒருவருடமாகி தேவையில்லாமல் மற்ற படங்களுக்கு கால்ஷீட் கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். இதனால் தான் படத்தில் இருந்து தான் வெளியேறியதாகவும் கிருத்தி செட்டி கூறியிருக்கிறார்.