ரெண்டு மூணு நடிகைகளை காதலித்தேன்.. ஆனா... ஓப்பனாக பேசிய இயக்குநர் பாலா..
வணங்கான் பாலா
இயக்குனர் பாலாவின் திரைக்கதைக்கென்ற பல ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது. தத்ரூபமான காட்சிகள் மூலம் மிரள வைக்கும் இயக்குனர் பாலா தன் படத்தில் நடிக்கும் கலைஞர்களை அடித்து டார்ச்சர் செய்து நடிப்பை வரவழைக்கும் பழக்கம் இருக்கிறது.
சமீபத்தில் கூட நடிகர் சூர்யா வணங்கான் படத்தில் பாலா கொடுத்த டார்ச்சரால் படத்தில் இருந்தே வெளியேறிவிட்டார் என்றெல்லாம் கூறி வந்தனர்.
ஆனால் அப்படியெல்லாம் இல்லை என்று சமீபத்தில் நடந்த வணங்கான் பட இசை வெளியீட்டில் சூர்யாவே ஓப்பனாக பேசியிருந்தார். சினிமா வாழ்க்கையில் 25 ஆண்டுகள் கடந்த பாலாவின் சிறப்பு நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது.
நடிகைகளை காதலித்தேன்
அதில் நடிகர் சிவக்குமார் பாலாவிடம், சேது என்கிற காதல் படத்தில் மூலம் இயக்குநராகிய நீங்கள், சினிமா உலகத்தில் யாரையாவது காதலித்து இருக்கிறீர்களா? என்றும் எந்த கதாநாயகியாவது ஜாடைமாடையாக யாராவது காதலித்து இருக்கிறார்களா? என்ற கேள்விகளை கேட்டுள்ளார்.
அதற்கு பாலா, ரெண்டு மூணு இருந்திருக்கு, ஆனால் எல்லாருக்கும் திருமணமாகி குழந்தைகள் இருப்பதால் பேர் சொல்லமாட்டேன் என்று கூறியிருக்கிறார் பாலா.