18 வயது வித்தியாசம்!! எனக்கு புள்ள பொறக்கும்!! 4வது கல்யாணம் செய்த பாலா பதிலடி..

Gossip Today Tamil Actors
By Edward Oct 29, 2024 03:30 AM GMT
Edward

Edward

in Gossip
Report

தமிழ், மலையாள படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் பாலா. இவர் இயக்குநர் சிறுத்தை சிவாவின் உடன்பிறந்த தம்பியாவார். முதலில் சந்தனா சதாசிவா என்பவரை திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியானது. ஆனால் முதல் திருமணம் குறித்து பாலா எந்த தகவல் கூறவில்லை.

18 வயது வித்தியாசம்!! எனக்கு புள்ள பொறக்கும்!! 4வது கல்யாணம் செய்த பாலா பதிலடி.. | Bala Open Planning Baby With Third Wife Kokila

மூன்று கல்யாணம்

அதன்பின் தான் கடந்த 2010ல் பாடகி அம்ருதாவை திருமணம் செய்து சில ஆண்டுகளுக்கு பின் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விவாகரத்து பெற்றனர். 2016ல் இரண்டாம் மனைவியை விவாகரத்து செய்த பாலா, 2021ல் எலிசபெத் என்ற மருத்துவரை 3ஆம் திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களின் திருமணம் சட்டப்பூர்வமாக பதிவு செய்யப்படவில்லையாம். ரகசியமாக இவர்களின் திருமணம் நடந்த நிலையில், தற்போது இரண்டாம் மனைவியுடன் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார் பாலா.

18 வயது வித்தியாசம்!! எனக்கு புள்ள பொறக்கும்!! 4வது கல்யாணம் செய்த பாலா பதிலடி.. | Bala Open Planning Baby With Third Wife Kokila

250 கோடி சொத்து

சமீபத்தில் முதல் மனைவி அம்ருதா, பாலா மீது புகாரளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். பாலா கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்து மனைவி கொடுத்த புகாருக்கு பதிலடியும் கொடுத்திருந்தார். அவர் அளித்த பேட்டியில், தன்னிடம் 250 கோடி சொத்து இருக்கிறது. தனது குடும்ப சொத்தில் இருந்து பங்காக இந்த 250 கோடி வந்ததாகவும் இந்த சொத்து குறித்து அறிவிப்பு வெளியானதும் தனது உயிருக்கு அச்சுறுத்தல்கள் வருகிறது என்று கூறியிருந்தார். இதனையடுத்து கடந்த வாரம், கோகிலா என்பவரை கேரளாவில் உள்ள பாவகுளம் மகாதேவர் கோவில் சட்டபூர்வமாக மூன்றாவது திருமணம் செய்து கொண்டார் நடிகர் பாலா.

லீகலி 3வது கல்யாணம்

மூன்றாம் திருமணம் குறித்து பேட்டி அளித்துள்ள பாலா, பல முறை திருமணம் செய்து கொண்டதாக பலரும் என்னை விமர்சனம் செய்து வருகின்றனர். திருமணத்திற்கு பெண் கிடைக்காதவர்கள் தான் என்னை பார்த்து பொறாமைப்படுகின்றனர். எனது மனைவி கோகிலாவிற்கு 24 வயதாகிறது. என் கோடிக்கணக்கான சொத்துக்கள் அனைத்தையும் நிர்வகிப்பது அவர் தான், அவருக்குத்தான் என் சொத்து. நான் ராஜா போல வாழ்வேன்,என் மனைவி ராணி போல வாழ்வார். மேலும், நாங்கள் விரைவில் குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படுகிறோம்.விரைவில் எங்களுக்கு குழந்தை பிறக்கும். என்னுடன் இருக்கும் அனைவரும் எப்போதும் நலமாகவே இருப்பார்கள். இதைப் பார்த்து யாராவது பொறாமைப்பட்டால், அது அவர்களின் தவறு என்று பதிலடி கொடுத்தார் பாலா.