வெயிலில் ஓடவிட்ட பாலாவுடன் சிரித்து பேசும் சூர்யா! வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த புகைப்படம்..

By Edward May 26, 2022 08:57 AM GMT
Report

நடிகர் சூர்யா கடந்த 18 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் நடிக்க தன்னுடைய 41 வது படத்தினை கொடுத்திருந்தார். சூர்யா தயாரிப்பில் நடிக்கவுள்ள இப்படத்தின் ஷூட்டிங் கன்னியாகுமரியில் ஆரம்பிக்கப்பட்டது.

படப்பிடிப்பு சென்றுகொண்டிருக்கும் போது பாலாவுக்கும் சூர்யாவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட சூர்யா அங்கிருந்து சென்றுவிட்டார். இதனால் இருவருக்கும் சண்டை ஏற்பட்ட படம் இழுத்து மூடும் நிலைக்கு பேசப்பட்டது.

மேலும் படத்தின் ஒரு காட்சிக்காக வெயிலில் ஓடவிட்டதாகவும் கூறப்பட்டது. இதனால் தான் சூர்யா அப்படி நடந்து கொண்டார் எனவும் கூறப்பட்டது.

டிராப்பான சூர்யா41 வது படம் என்று சமீபத்தில் இணையத்தில் செய்திகள் கசிந்தது. ஆனால் முதல் கட்டப்படப்பிடிப்பு தான் முடிந்துள்ளது என்றும் விரையில் இப்படத்தின் இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு சென்னை அல்லது கோவாவில் துவங்கும் என்றும் கூறப்பட்டது.

இதனை உறுதிப்படுத்தவரும் படம் டிராப் என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் சூர்யா அவரது டிவிட்டர் பக்கத்தில் புது அட்டேட்டினை வெளியிட்டுள்ளர். சூர்யா41 படத்தின் அடுத்த ஷுட்டிற்காக காத்திருக்கிறேன் என்று கூறி பாலாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.