ஒருவேலை சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டு வந்த பாலா!! கடைசி நேரத்தில் நடிகர் மூலம் உதவிய நடிகை..
தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக திகழ்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்து பிரம்மிப்பில் ஆழ்த்தியவர் இயக்குனர் பாலா. வித்தியாசமான நடிப்பு, கதாபாத்திரம், எதார்த்தமான நடிப்பை கலைஞர்களிடம் இருந்து பெறுபவராக திகழ்ந்து வந்தார். ஆனால் ஒரு காலத்தில் ரொம்பவே கஷ்டப்பட்டு சாப்பாட்டு கூட வழியில்லாமல் கஷ்டப்பட்டு வந்தார்.
இயக்குனராக அறிமுகமாகிய முதல் படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தாலும் பண ரீதியாக படம் வசூலிக்கவில்லை. அப்படி சேது படத்தினை ஆரம்பிக்கும் போது பல பிரச்சனைகளை சந்தித்து வந்துள்ளார் பாலா. விக்ரம் எப்படியாவது ஒரு படத்தில் நன்றாக நடித்து உயரத்தை தொடவேண்டும் என்ற ஆசையில் இருந்த காலம்.
சினிமா வாய்ப்பில்லாமல் நடிகை ராதிகாவிடம் கூறி சீரியலில் நடிக்கவும் துணிந்துள்ளார். அப்போது பாலா விக்ரமுக்கு வாய்ப்பு கொடுக்க முன் வந்துள்ளார். உடனே ராதிகாவிடம் சென்று ஒரு பட வாய்ப்பு வந்திருக்கிறது, படம் ஓகே ஆனால் சினிமா பயணம் இல்லை என்றால் சீரியல் நடிக்க வருகிறே என்று கூறியிருக்கிறார். படமும் ஆரம்பிக்க துவங்கியது.
ஆனால் திடீரென சில பிரச்சனையால் ஷூட்டிங் பல மாதங்கள் நிறுத்தப்பட்டது. இதனால் சீரியலுக்கே செல்ல முயற்சித்த விக்ரம், ராதிகாவிடம் அந்த சீரியலுக்காக 60 ஆயிரம் சம்பளத்தை பெற்றார். சீரியல் ஆரம்பிக்கும் நேரத்தில் பாலா சேது படத்தினை இயக்க ஆரம்பித்தார்.
மீண்டும் ராதிகாவிடம் அதையே சொல்லிவிட்டு படத்தில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார் விக்ரம். அப்போது பாலா பணத்திற்காக கஷ்டப்பட்டு இருப்பதை பார்த்த விக்ரம், ராதிகாவிடம் வாங்கிய சம்பளத்தின் பாதித்தொகையான 30 ஆயிரத்தை பாலாவிடம் கொடுத்து ஊக்கப்படுத்தி சேது படத்தினை முடித்திருக்கிறார். அப்படி விக்ரம் பாலா வாழ்க்கையையே மாற்றிய படமாக சேது படம் மாறியது.