சூர்யா சொத்தை அநாவசியமாக செலவு செய்யும் விவாகரத்தான இயக்குனர்.. ரொம்ப பாவம் சார் நீங்க

Suriya Bala
By Kathick Jun 25, 2022 01:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், சிறந்த தயாரிப்பாளராகவும் பல படங்களை கொடுத்து வருகிறார் சூர்யா. இவர் நடிப்பில் அடுத்ததாக சூர்யா 41 திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை பாலா இயக்கி வருகிறார். ஏற்கனவே சூர்யா நடிப்பில் வெளிவந்த நந்தா மற்றும் பிதாமகன் ஆகிய படங்களை பாலா இயக்கியிருந்தார்.

சூர்யா 41 படத்தில் சூர்யாவுடன் இணைந்து முதல் முறையாக தெலுங்கு திரையுலகின் சென்சேஷன் நடிகர் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்து வருகிறார். ஏற்கனவே இப்படத்தின் படப்பிடிப்பில் சூர்யாவிற்கும் இயக்குனர் பாலாவிற்கும் சண்டை என்று தகவல் வெளியானது. இதனால், படப்பிடிப்பில் இருந்து சூர்யா கடுப்பில் வெளியேறினார் என்று கூறப்பட்டது.

ஆனால், அது உண்மையில்லை, எங்கள் இருவருக்குள் எந்த ஒரு சண்டையும் நடக்கவில்லை என்பதுபோல் புகைப்படத்தை வெளியிட்டு, அந்த விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள். ஆனால், நமக்கு கிடைத்திருக்கும் தகவலின்படி, பாலா மற்றும் சூர்யா இருவருக்கும் இடையே மோதல் இருப்பதாக தெரியவந்துள்ளது.

ஏனென்றால், இப்படத்திற்காக ஒரு வீட்டை 25 லட்சம் செலவு செய்து கட்டச்சொல்லியுள்ளாராம் இயக்குனர் பாலா. படத்திற்காக தானே சொல்கிறார் பாலா, படத்தில் முக்கியமான காட்சிகள் அந்த வீட்டில் எடுக்கப்படும் என்று நினைத்து சூர்யாவும் தனது தயாரிப்பு செலவில் அந்த வீட்டை கட்டி முடித்துள்ளார். ஆனால், ஒரு காட்சி கூட அந்த வீட்டில் வைத்து எடுக்கவில்லையாம் பாலா.

இதுமட்டுமின்றி சொன்ன நாட்களுக்குள் படப்பிடிப்பு முடிக்காமல் இழுத்துக்கொண்டே போகிறாராம். இதனால், படத்தின் பட்ஜெட் எகிறிக்கொண்டே போவதால், கோவாவில் நடக்கவிருந்த படப்பிடிப்பை, பாண்டிச்சேரியில் வைத்து முடிக்கும்படி சூர்யா கூறியவிட்டாராம். இயக்குனர் பாலாவிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன் விவாகரத்து ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.