ஆணவத்தில் ஆடிய இளையராஜா!! ஏ ஆர் ரகுமானை வைத்து அடக்கிய பாலச்சந்தர்...
தமிழ் சினிமாவில் எம் எஸ் வி அவர்களுக்கு அடுத்த இடத்தினை பிடித்து பெரிய ஜாம்பவனாகவும் அந்த காலத்து இயக்குனர்களின் தோஸ்த் இசையமைப்பாளராகவும் திகழ்ந்தவர் இசைஞானி இளையராஜா.
இசைஞானி
அப்படி கொடிக்கட்டி பறந்து சிம்மாசனத்தில் இருந்த இசைஞானியின் வாய்ப்புகளை தட்டித்தூக்கி அப்படியே தன்னுடைய கோட்டையை கட்டியவர் ஏ ஆர் ரகுமான். இசைஞானிக்கு போட்டியாக ரகுமானி வரவு மிகப்பெரியளவில் பிரபலமாகி இசைஞானியின் மார்க்கெட்டை குறைத்தது.
அப்படி ஒரு தலைக்கனத்தோடும் ஆணவத்தோடும் ஆடிய இளையராஜை முடக்க இயக்குனர் பாலச்சந்தர் போட்ட ஒரு அம்பு தான் ஏ ஆர் ரகுமான். ஆரம்பத்தில் வாய்ப்பு கொடுத்தவர்களையும் உதவியவர்களையும் விசுவாசம் இல்லாமல் பகைத்து கொண்டார் இளையராஜா. அப்படி பாலச்சந்தருக்கும் ஒரு சம்பவத்தை செய்திருக்கிறார்.
ரோஜா
இளையராஜாவுக்கும் பாலச்சந்தருக்கும் இடையில் பிரச்சனை போய் கொண்டிருக்கும் சமயத்தில் ரோஜா படத்தினை மணிரத்னம் இயக்க பாலச்சந்தர் தயாரித்திருந்தார். அப்போது இளையராஜாவை தவிர வேறு ஒரு இசையமைப்பாளரை பாலச்சந்தர் வேண்டும் என தேடிக்கொண்டிருந்தார். தனக்கான இசையமைப்பாளர் இளையராஜாவையும் விடமுடியாமல் குருவின் வார்த்தையையும் மீறமுடியாமல் தவித்திருக்கிறார் மணிரத்னம்.
அந்த ஒரு இக்கட்டான சூழலில் அனைத்து இசையமைப்பாளரிடமும் பணியாற்றிய திலீப் என்ற இளைஞர் கண்ணுக்கு தெரிந்துள்ளார். பாலச்சந்தரிடம் கூட்டிச்சென்று திலீப்பை அறிமுகப்படுத்தி இருக்கிறார் மணிரத்னம். ஒருவரின் முகத்தை திறமையை பார்த்து கணக்கிடும் குணம் கொண்ட பாலச்சந்தர் திலீப் மீது நம்பிக்கை கொண்டு ரோஜா படத்தை முடித்தார்.
வைரமுத்து
படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டானதோடு இசை இந்தியளவில் பேசப்பட்டது. அப்படி மிகப்பெரிய ஜாம்பவான் ஆக்கிய பெருமை பாலச்சந்தருக்கு இருக்கிறதோ இல்லையோ இளையராஜாவின் கோட்டையை உடைக்க மிகப்பெரிய அஸ்திரமாக ஏ ஆர் ரகுமான் அமைந்தார்.
அதேசமயத்தில் தான் வைரமுத்துவுக்கும் இசைஞானிக்கு பிரச்சனை ஏற்பட, ரோஜா படத்தில் இருந்து ரகுமான் வைரமுத்து கூட்டணி ஆரம்பமானது. இப்படி தன் ஆணத்தினால் இளையராஜா கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் சினிமாவில் மார்க்கெட்டை இழந்தார்.