இரவு பார்ட்டியில் பிக் பாஸ் பாலாஜியுடன், ஷிவானி.. ஒரு வேல அதுவா இருக்குமோ
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை பல ஜோடிகள் காதலித்துள்ளார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அந்த சர்ச்சையில் சிக்கியவர்களில் ஒரு ஜோடி தான், நடிகை ஷிவானி மற்றும் பாலாஜி முருகதாஸ்.
பிக் பாஸ் சீசன் 4ல் கலந்துகொண்ட இவர்கள் இருவரும், பழகிய விதத்தை வைத்து பலரும் இவர்கள் இருவரும் காதலித்து வந்தார்கள் என்று கூறி வந்தனர். அதற்கு ஏற்றார் போல் பாலாஜியும், 'உன்னை காதலித்தால், கண்டிப்பாக உன்னிடம் சொல்வேன்' என்று பிக் பாஸ் வீட்டிற்குள் ஷிவானியிடம் கூறியிருந்தார்.
இந்நிலையில், நேற்று புத்தாண்டு இரவு பார்ட்டியில் ஷிவானி மற்றும் பாலாஜி முருகதாஸ் இருக்கும் இணைந்து கொண்டாடியுள்ளனர். இவர்களுடன் இணைந்து சம்யுக்தாவும் இந்த பார்ட்டியில் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியான நிலையில், நெட்டிசன்கள் பலரும், பாலாஜி மற்றும் ஷிவானியை வைத்து, ' ஒரு வேல அதுவா இருக்குமோ ' என்று மீம் போட்டு வருகிறார்கள்.
