தாடி பாலாஜியின் மகள் போஷிகாவா இது! அடையாளம் தெரியாமல் இப்படி வளர்ந்துட்டாங்களே?
தமிழ் சினிமாவில் சிறு காமெடி கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் பாலாஜி. முன்னணி காமெடி நடிகராக முடியாவிட்டாலும் படங்களின் வாய்ப்புகள் கிடைக்காமல் தொலைக்காட்சி நிகழ்ச்சி பக்கம் தாவினார். பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வரும் பாலாஜி நித்யா என்பவரை திருமணம் செய்து போஷிகா என்ற மகளையும் பெற்றெடுத்தனர்.
குழந்தை பிறந்த சில ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் ஆரம்பித்து பல சர்ச்சையிலும் சிக்கினார்கள். பெரியளவில் பேசப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்திய இவர்கள் விவகாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் தொடர ஆரம்பித்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருவரும் சேருவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் மீண்டும் பிரிந்து வந்தனர். மகள் போஷிகாவிற்காக இருவரும் வேலைகளில் கவனம் செலுத்தி வந்தனர். இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதாவது புகைப்படங்களை வெளியிடும் நித்யா தற்போது தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தில் நித்யாவும் தனது மகள் போஷிகாவும் ஒரே மாதிரி ஆடை அணிந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படத்தில் போஷிகா வளர்ந்து அடையாளம் தெரியாமல் இருப்பதை ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.