மறைந்த நடிகர் மதன் பாப்-பின் மற்ற முகங்கள் இதுதான்..பிரபல தயாரிப்பாளர் ஓபன் டாக்..

Actors Death Tamil Actors
By Edward Aug 03, 2025 12:30 PM GMT
Report

மதன் பாப்

இசைக்கலைஞராக தன் திரைப்பயணத்தை தொடங்கி, கிட்டார் வாசிப்பாளராகவும் ட்ரம்ஸ் கலைஞராகவும் இருந்தவர் தான் மதன் பாப். இதன் காரணமாக கிருஷ்ண மூர்த்தி என்ற பெயரை மடன் என மாற்றி அதனுடன் பாப் என்று சேர்த்து மதன் பாப் என வைத்துக்கொண்டார்.

மறைந்த நடிகர் மதன் பாப்-பின் மற்ற முகங்கள் இதுதான்..பிரபல தயாரிப்பாளர் ஓபன் டாக்.. | Balaji Prabhu Shares About Madhan Bobs Unknown

பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தன் சிரிப்பால் கவர்ந்த மதன் பாப், புற்றுநோய் இருப்பது சில காலத்துக்கு முன் கண்டறியப்பட்டு, தீவிரமான சிகிச்சையும் எடுத்து வந்தார். அதற்காக எப்படியாவது மீண்டுவிடலாம் என்று நம்பிக்ககொண்டிருந்தார்.

சூழல் இப்படியிருக்கையில் நேற்று அடையாறில் இருக்கும் அவரது இல்லத்தில் உயிரிழந்தார் மதன் பாப். அவரது இறப்புக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், மதன் பாப் குறித்து பிரபல தயாரிப்பாளராக பாலாஜி பாபு பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார்.

மறைந்த நடிகர் மதன் பாப்-பின் மற்ற முகங்கள் இதுதான்..பிரபல தயாரிப்பாளர் ஓபன் டாக்.. | Balaji Prabhu Shares About Madhan Bobs Unknown

பாலாஜி பாபு

மதன் பாப் இயல்பாகவே ரொம்ப நல்ல மனிதர். அவருக்கு இசை மீது தீராத ஆர்வம் இருந்ததால் இசைதுறையில் வெள்ள வேண்டும் என்று தான் சினிமாவிற்கு வந்தார் காலப்போக்கில் நடிகராக மாறினார். நான் அவரை வைத்து காதல் ரோஜா என்ற படத்தை தயாரித்தேன்.

அப்படத்தின் ஷூட்டிங்கின் போது ஃபெப்சி அமைப்பு சார்பாக நடந்த போராட்டத்தால் ஷூட்டிங் நடத்த தடை விதித்தனர். ஆனால் இரு நாட்கள் மதன் பாப்பை வைத்து ஷூட் செய்ய வேண்டிய சூழல். அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது கண்டிப்பாக நான் வந்துவிடுகிறேன் என சொல்லி நடித்துக்கொடுத்தார்.

ஷூட்டிங் நடந்தபோது அங்கே வந்த ஃபெப்சி அமைப்பினர் பிரச்சனை செய்தார்கள். மதன் பாப் ஆவர்களிடம் பேசி புரியவைத்தார். யாரிடமும் கோபப்படமாட்டார். இசை, நடிப்பு மட்டுமின்றி அருமையாக மிமிக்ரியும் செய்யக்கூடியவர் மதன் பாப் என்று பாலாஜி தெரிவித்துள்ளார்.