தவறான பழக்கத்திற்கு அடிமையான கார்த்திக்!! ரகசியம் உடைத்த பிரபலம்
கார்த்திக் சினிமாவில் நிறைய புகழை சம்பாதித்து இருந்தாலும் நிறைய சர்ச்சைகளிலும் சிக்கி இருக்கிறார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பிரபல தயாரிப்பாளரின் மகன் பாலாஜி பிரபு, நடிகர் கார்த்திக் சில தவறான பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி விட்டதால் அவரால் ஒழுங்காகப் ஷூட்டிங்க்கு வர முடியவில்லை. சினிமாவிற்கு வந்து சில வருடங்களில் அவர் நடித்த வருஷம் 16 வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது.
சட்டத்தின் திறப்பு விழா படத்திற்கான தேதிகளை கொடுத்தார் கார்த்திக். ஆனால், அந்தப் திரைப்படத்தால் எங்களுக்கு லாபமும் இல்லை, நஷ்டமும் இல்லை. சக்கரவர்த்தி படத்தில் நடிக்கும் போது ஷூட்டிங் ஒழுங்காக வராமல் இழுத்தடித்துக்கொண்டிருந்தார். இதில் அப்பா மிகவும் டென்ஷனாகி விட்டார்.
அந்த சமயத்தில் வேறொரு படத்தில் கார்த்திக் நடிப்பதை அறிந்த என்னுடைய அப்பா, அடியாட்களுடன் சென்றார். இதை தெரிந்து கொண்ட கார்த்திக் அங்கு இருந்து ஓடி ஒளிந்து கொண்டார் என்று பாலாஜி பிரபு தெரிவித்துள்ளார்.