ரூ. 50 கோடிக்கு நாய் வாங்கிய நபர்!! அப்படி என்னதான் ஸ்பெஷல்...
ரூ. 50 கோடிக்கு நாய்
உலகில் பலருக்கும் செல்லப்பிராணிகளை வளர்க்க ஆசைப்பட்டு வளர்த்து வருவார்கள். அதிகப்படியாக நாய், பூனைகளை தான் மக்கள் அதிகளவில் வளர்ப்பார்கள். உலகில் எண்ணற்ற நாய் இனங்கள் இருக்கிறது. ஆனால் சில அரிதான் நாய் இனங்களை செல்லப்பிராணி ஆர்வலர்கள் அதிக விலைக்கொடுத்து வாங்கி வளர்க்கும் ஆசை இருக்கும்.
அந்தவகையில் பெங்களூருவை சேர்ந்த ஒரு நாய்கள் வளர்ப்பவரான சதீஷ் என்பவர் ரூ. 50 கோடிக்கு ஒரு நாயை வாங்கி சாதனை படைத்து உலகையே திரும்ப பார்க்க வைத்திருக்கிறார்.
ஸ்பெஷல்
கடபோம் ஒகாமி என்று அழைக்கப்படும் நாய் இனத்தை சேர்ந்த இந்த நாய் ஓநாய் மற்றும் காகசியன் ஷெப்பர்ட் நாய்களின் கலவையாகும். இந்த நாய் பிறந்து 8 மாதங்களான நிலையில் 75 கிலோ கிராம் எடையும் 30 அங்குல உயரமும் கொண்டது.
தினமும் 3 கிலோ பச்சை கோழியை சாப்பிடும் இந்த நாய் கம்பீரமாக ஓநாய் மாதிரி நடந்து வருமாம். 50 கோடி கொடுத்து வாங்கிய சதீஷ் சுமார் 150க்கும் மேற்பட்ட வெவ்வேறு இனங்களை கொண்ட நாய்களை வளர்த்து வருகிறாராம்.
இந்த நாய்களை பார்க்க வரும் மக்கள் செல்ஃபி எடுக்க முற்படும் போது சினிமாவில் நடிக்க வைப்பதன் மூலமும் பணம் சம்பாதிக்க முடியும் என்று சதீஷ் தெரிவித்துள்ளார். சிகப்பு கம்பளத்தில் அந்த நாய் நடந்து சென்ற வீடியோ தற்போது வரை 30 லட்சத்திற்கும் மேல் பார்வையாளர்களை பெற்றுள்ளதாம்.