இது யார் கனவு? பாரதி கண்ணம்மாவை வெச்சி செய்யும் நெட்டிசன்கள்
பாரதி கண்ணம்மா சீரியல் எப்போ தான் முடியும் என அதன் ரசிகர்களே கேட்கும் அளவுக்கு ஜவ்வாக தான் சென்று கொண்டிருக்கிறது. பாரதி தான் அப்பா என்கிற உண்மையை லக்ஷ்மியிடம் கண்ணம்மா சொல்வாரா இல்லையா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
கண்ணம்மா பிறந்தநாள் விழாவில் தன் அப்பாவின் வருகைக்காக லக்ஷ்மி காத்திருக்கிறாள். அந்த நேரத்தில் கண்ணம்மா பாரதியிடம் தனியாக 'ஹேமா நான் பெற்ற குழந்தை' என சொல்கிறார். ஆனால் பாரதி அதை நம்புவதாக இல்லை.
அதன் பிறகு கண்ணம்மா எல்லோர் முன்னிலையிலும் லட்சுமியின் அப்பா Dr பாரதி தான் என்கிற விவரத்தை கூறிவிடுகிறார். அதை கேட்டு பாரதி, வெண்பா அதிர்ச்சி ஆகின்றனர். இன்றைய எபிசோடு இதனுடன் முடிகிறது.
வழக்கம்போல இந்த சீனும் கனவு என இயக்குனர் காட்டப் போகிறாரோ என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். "இது யார் கனவா இருக்கும்?" என கமெண்டில் கேட்டு வருகின்றனர்.
❤️ #BarathiKannamma pic.twitter.com/ePBm74ds1W
— Vijay Television (@vijaytelevision) February 24, 2022