கால் விரல்கள் எடுத்துட்டாங்க..பிச்சை எடுக்குற நிலை!! நடிகருக்கு நேர்ந்த சோகம்..
பாவா லட்சுமணன்
தமிழில் காமெடி நடிகராக திகழ்ந்து பலரது கவனத்தை ஈர்த்தவர் தான் நடிகர் பாவா லட்சுமணன். சமீபத்திலொரு விபத்து காரணமாக காலில் 3 விரல்களை இழந்து வறுமையின் விளிம்பில் நின்றுள்ளதாக கூறி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், நான் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக இருக்கிறேன். ஆரம்பத்தில் புரொடக்ஷன் மேனேஜராக வேலை பார்த்தேன். அதன்பின் நடிகனாக மாறினேன். மாயி படம் எனக்கு பெரிய அடையாளம் தந்தது, ஆனால் சமீபகாலமாக எனக்கு சினிமாவில் வாய்ப்பே இல்லை.

கொஞ்ச நாளைக்கு முன்னாடி கர்நாடகாவில் ஒரு தேர்தல் பிரச்சாரத்திற்கு போயிருந்தபோது, எதிர்பாராத விதமாக அங்கிருந்த ஜெனரேட்டர் மேல் கால் வச்சுட்ட்டேன். அப்போது எனக்கு வலி எதுவும் தெரியவில்லை, ஆனால் 10 நாள் கழித்து கால் பயங்கராக வீங்கிவிட்டது.
ஆஸ்பிட்டலில் காட்டியபோது இன்பெக்ஷனாகி உடனே ஆபரேஷன் பண்ணி 3 விரல்களையும் எடுக்கணும் என்று சொல்லிவிட்டார்கள். வேறுவழியில்லாமல் விரல்களை எடுத்துவிட்டேன். விரல்களை எடுத்தப்பின் பாவா லட்சுமணனால் இனி நடக்கவே முடியாது என்று சினிமா வட்டாரத்தில் தவறான தகவல் பரவியதால் படவாய்ப்பு வரவே இல்லை.
பிச்சை எடுக்குற நிலை
இப்போது நான் பிச்சை எடுக்குற நிலைமையில் தான் இருக்கிறேன். இந்த வீட்டையும் காலி பண்ண சொல்லிட்டாங்க. என் நண்பர் தான் இப்போதைக்கு தங்குறதுக்கு ஒரு வீடு பார்த்து கொடுப்பதாக சொல்லியிருக்கிறார்.
இந்த இக்கட்டான சூழலில் விஜய் டிவி பாலா, நடிகர் ஜீவா உள்ளிட்டவர்கள் எனக்கு தொடர்ந்து சாப்பாட்டுக்கும் மருத்துவச் செலவுக்கும் பண உதவி செஞ்சிட்டு இருக்காங்க
. எனக்கு இப்போது முதலமைச்சர் விஜய் அவர்கள் எனக்கு ஏதாச்சும் உதவி செய்தால் நன்றாக இருக்கும். அவரை நேரில் போய் பார்க்க எவ்வளவோ முயற்சி பண்ணிட்டேன், ஆனால் என்னால் அவரை பார்க்க முடியவில்லை. இருப்பதற்கு ஒரு வீடு கூட இல்லாமல் கஷ்டப்படுகிறேன். எனக்கு ஒரு வீடு கிடைச்சா, என் கடைசி காலத்தை நிம்மதியா கழிப்பேன் என்று கண்ணீருடன் பகிர்ந்துள்ளார் பாவா லட்சுமணன்.