எனக்கு திருப்தி அளிக்கவில்லை!! வெளிப்படையாக பேசிய நடிகை தமன்னா..
Tamannaah
Bollywood
Indian Actress
Jailer
By Jai
தமன்னா
கேடி, வியாபாரி, கல்லூரி, பையா, அயன், படிக்காதவன், சுறா, சிறுத்தை போன்ற படங்களில் நடித்து தமிழில் பிரபலமானவர் நடிகை தமன்னா. இதனையடுத்து முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வந்தவர், தற்போது பாலிவுட்டில் டாப் நடிகையாக ஜொலித்து வருகிறார்.

நடிப்பை தாண்டி பிசினஸிலும் ஈடுபட்டு சம்பாதித்து வரும் தமன்னா, ஜெயிலர் படத்தில் காவாலா பாடலில் ஆடியது குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
எனக்கு திருப்தி
அதில், ரஜினியின் ஜெயிலர் படத்தில் காவாலா பாடல் படப்பிடிப்பின்போது எனக்கு கொஞ்சம் திருப்தி இல்லாமல் இருந்தது. இன்னும்கூட நன்றாக நடனமாடி இருக்கலாமோ என்று நினைத்தேன்.

அதேபோல் ஆஜ் கி ராத் பாடல் ஷூட்டிங்கில் நடனமாடுவதற்கு முன் நான் 15 நாட்கள் நடன பயிற்சி எடுத்தேன், காரணம் நான் தேர்ந்த நடன கலைஞர் கிடையாது என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார்.