பொண்டாட்டி புள்ள வரல.. ஆயிரத்தெட்டு பஞ்சாயத்து!! மோசமாக பேசிய பிரபலம்..
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி
நடிகர் விஜய் சினிமாவில் இருந்து முழு நேர அரசியலில் ஈடுபட பல வேலைகளை செய்து வருகிறார். தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை சில நாட்களுக்கு முன் பிரம்மாண்ட முறையில் அறிமுகப்படுத்தினார். அவரின் அரசியல் வருகை பற்றியும், கொடி குறித்த விமர்சனங்கள் குறித்து பலர் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

அந்தவகையில் பயில்வான் ரங்கநாதன் தன் பங்கிற்கு சில கருத்துக்களை விஜய் மீது திணித்து பேசியிருக்கிறார். வெளியில் கொடியேற்ற அனுமதியில்லை என்று வீட்டிற்குள் கொடியேற்றினார். இந்த விழாவில் விஜய் பேசி முடித்ததும், பின் பெற்றோருக்கு நன்றி சொல்ல மறந்துட்டேனு கூறியிருந்தார்.
ஆனால் விஜய் மேடைக்கு செல்லும்போது அவரது தாய் ஷோபா, கைக்காட்டி வா என்று கூப்பிட்டும் அதை மறுத்துவிட்டு போய்விட்டார் விஜய். நல்ல அரசியல் தலைவர்னா முதலில் பெற்றோர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கவேண்டும்.
குடும்பத்தை காப்பாத விஜய்
தாய் தந்தை தான் நம்மை பெற்றவர்கள் என்பதால் அவர்கள் காலில் விழுந்து விஜய் முதலில் ஆசிர்வாதம் வாங்கியிருந்தா பாராட்டலாம். விஜய் மனைவி சங்கீதா லண்டனில் இருக்கிறார். மகன் ஜேசன் சஞ்சய் வரவில்லை, மகள் திவ்யா வரவில்லை. மகன் இங்கு தான் கதை விவாதத்தில் இருக்கிறார். அவரும் வரவில்லை.

மகன், மகள், மனைவி வரவில்லை என்றால் குடும்பத்தில் பிரச்சனை என்பது இன்னும் குழப்பத்தை நீடிக்கிறது. குடும்பத்தில் மனைவி, குழந்தைகளுடன் வாழத்தெரியாத ஒரு நடிகர் எப்படி? என்ற கேள்வி எழுப்பி குடும்பத்தை சரியாக கவனிக்காத விஜய் எப்படி நாட்டை கவனிப்பார் என்று மறைமுகமாக தாக்கி பேசியிருக்கிறார் பயில்வான்.
அவர் யாரை எதிர்க்க போகிறார்? விலைவாசி உயர்வு பற்றி பேசவில்லை, கொள்கை, கோட்பாடுகள் பற்றி பேசவில்லை. கட்சிக்கொடி பற்றியும் கூறாமல் மாநாட்டில் கூடுவேன் என்று கூறி வாயை விஜய் பொத்திக்கொண்டு இருக்க என்ன காரணம் என்று வெளுத்து வாங்கி பேசியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன். இதற்கு விஜய் ரசிகர்கள் பயில்வானை கடுமையாக திட்டி கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.