ஜூலிக்கு கரு கலைந்ததா..எந்த ஹாஸ்பிட்டல்ல பார்த்தாரு! பயில்வான் சர்ச்சை பேச்சு..

Gossip Today Bayilvan Ranganathan Maria Juliana TVK
By Jai May 31, 2026 11:45 AM GMT
Report

ஜூலிக்கு கரு கலைந்ததா

ஜல்லிக்கட்டு, பிக்பாஸ் முலம் பிரபலமானவர் தான் ஜூலி. ஒருசில படங்களில் நடித்து வந்த ஜூலி, தேர்தல் சமயத்தில் தற்போதைய முதலமைச்சர் சி ஜோசப் விஜய்யை கடுமையாக விமர்சித்து வீடியோவை வெளியிட்டு வந்தார்.

சமீபத்தில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த ஜூலி, தன்னை சோசியல் மீடியாக்களில் கடுமையாக விமர்சித்ததாகவும் ஆபாசமாக தாக்கியதாகவும் கூறி குற்றம் சாட்டினார்.

ஜூலிக்கு கரு கலைந்ததா..எந்த ஹாஸ்பிட்டல்ல பார்த்தாரு! பயில்வான் சர்ச்சை பேச்சு.. | Bayilvan Questions Julies Miscarriage Claim

அந்த மன அழுத்தம் காரணமாக எனக்கு கருசிதைவு ஏற்பட்டதாகவும் தன்னுடைய குழந்தையை இழந்துவிட்டதாகவும் அதற்கு விஜய் தான் காரணம் என்று கண்ணீருடன் பேசியிருந்தார். இதுகுறித்து பலர் ஜூலியை விமர்சித்து வந்த நிலையில், பயில்வான் ரங்கநாதன் ஒருசில கருத்துக்களை முன் வைத்துள்ளார்.

பயில்வான்

அதில், ஜூலி பேசியதை கேட்கும்போது பல விஷயங்கள் முன்னுக்குப்பின் முரணா இருக்கிறது. ரூ. 200 கோடி சம்பளம் வாங்கும் ஒரு நடிகர், அரசியலிலும் சினிமாவிலும் டாப்பில் இருக்கும் ஒருவரை வாடா போடா என்று ஒருமையில் பேசினால் அவருடைய ரசிகர்கள் சும்மா இருப்பார்களா? வேலியில் போனா ஓணானை எடுத்து இடுப்பில் விட்டுக்கொண்டு குத்துதே குடையுதே என்று சொன்னால் என்ன அர்த்தம்.

ஜூலிக்கு கரு கலைந்ததா..எந்த ஹாஸ்பிட்டல்ல பார்த்தாரு! பயில்வான் சர்ச்சை பேச்சு.. | Bayilvan Questions Julies Miscarriage Claim

இவர் என் 3-வது கணவர் என்று சொல்கிறார்கள், இதற்கு முன் எனக்கு கல்யாணம் ஆகவில்லை, இவர்தான் என் முதல் கணவர் என்று சொல்ல வேண்டியது தானே. அதை ஏன் ஜூலி சொல்லவில்லை. தன் கணவர் பக்கத்தில் இருக்கும்போதும், அவரை பேச விடாமல் ஜூலியே பேசிக்கொண்டு இருக்கிறார். அதேபோல் தன்னுடைய கரு கலைந்ததற்கு TVKவினர் கொடுத்த மன உளைச்சல் தான் காரணம் என்று சொல்லியிருக்கிறார்.

ஜூலிக்கு எதனால் கரு கலைந்தது? கீழே விழுந்தாரா? இல்லை யாராவது அவரை தாக்கினார்களா? இல்லை கரு கலைந்த போது எந்த மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தார் என்று எந்த விஷயத்தையும் ஜூலி சொல்லவே இல்லை. அவ்வளவு நேரம் பேசியும், ஜூலி இது குறித்தும் விரிவான விளக்கத்தை கொடுக்காமல் கண்ணீர்விட்டு பேசினால் என்ன அர்த்தம். இதெல்லாம் ஜூலிக்கு தேவைதானா? என்று பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளார்.