கிங்ஸ்லியை வற்புறுத்தி திருமணம் செய்துகொண்ட சங்கீதா!! காரணம் என்ன தெரியுமா?..

Serials Actors Tamil TV Serials Tamil Actors Redin Kingsley
By Dhiviyarajan Dec 17, 2023 07:24 AM GMT
Report

கோலமாவு கோகிலா படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமான ரெடின் கிங்ஸ்லி, தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் ரெடின் கிங்ஸ்லி சீரியல் நடிகை சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். பெங்களுரில் படப்பிடிப்பில் ரெடின் கிங்ஸ்லி இருந்ததால், அங்கே மிகவும் எளிமையான முறையில் நெருங்கிய சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது.

கிங்ஸ்லியை வற்புறுத்தி திருமணம் செய்துகொண்ட சங்கீதா!! காரணம் என்ன தெரியுமா?.. | Bayilvan Ranganathan About Redin Kingsley Marriage

இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் பேசுகையில், ரெடின் கிங்ஸ்லி - சங்கீதா காதல் விவகாரம் எல்லாருக்கும் தெரியவந்தது. இந்த விஷயத்தால் பயந்துபோன சங்கீதா, 'என்னை உடனடியாக திருமணம் செய்துகொள்' என்று ரெடின் கிங்ஸ்லி இடம் வற்புறுத்தியுள்ளார்.

இதனால் அவசர அவசரமாக திருமணம் நடைபெற்றது அதில் சினிமா பிரபலங்களால் கலந்துகொள்ள முடியவில்லை என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.    

You May Like This Video