சொல்றதுக்கு ஒன்னும் இல்ல, நோ கமெண்ட்ஸ்!! வாரிசு, துணிவு-ஆல் கடுப்பாகிய பயில்வான்

Abbas Ajith Kumar Vijay Bayilvan Ranganathan
By Dhiviyarajan Jan 11, 2023 07:36 AM GMT
Report

துணிவு

தமிழ் திரைத்துறை தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் அஜித் குமார். இவர் நடிப்பில், ஹெச் வினோத் இயக்கத்தில் உருவான துணிவு திரைப்படம் இன்று ரிலீஸானது.

இதே தினத்தில் தான் விஜய்யின் வாரிசு திரைப்படமும் திரையரங்கில் வெளியானது. தற்போது இரண்டு படங்களுமே பாசிட்டிவ்வாக விமர்சனம் பெற்று வருகிறது

துணிவு vs வாரிசு 

இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் பயில்வானிடம், துணிவு மற்றும் வாரிசு படத்தை குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு அவர், "துணிவு படத்தில் 'சண்டை..சண்டை'. என்ன பொறுத்த வரை வாரிசு திரைப்படம் நம்பர் 1. அதில் கதை இருந்தது" என்று பதில் அளித்தார். 

மேலும் அவரிடம், துணிவு திரைப்படம் Money Heist மற்றும் பாலிவுட் படங்கள் போன்று இருந்ததாக பலரும் கூறுகிறார்கள். இதை பற்றி உங்களின் கருத்து என்னவென்று கேட்டனர்.

அதற்கு பயில்வான் முறைத்து கொண்டு 'no comments' என்று பதில் அளித்து விட்டு சென்றார்.