அஜித் அப்படி சொன்னாரு விஜய் ஆண்டனி அப்படி சொன்னாரா..பரபரப்பை கிளப்பும் பயில்வான்
சமீபத்தில் நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த துக்கச்செய்தி தொடர்பான பல விடியோக்கள் மற்றும் வாசிப்புகள் சமூக வலைத்தளங்களில் வெளியானது. சில மீடியாக்கள் துக்க வீட்டில் எல்லை மீறி நடந்து கொண்டார்கள்.
இதை கண்டித்து திரைப்படம் தயாரிப்பாளர் சங்கம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், இனி பிரபலங்கள் மற்றும் சினிமா துறையினர் துக்க நிகழ்வுகளில் வீடியோ எடுக்க மறுப்பு தெரிவித்தனர். அப்படி எடுக்க வேண்டும் என்றல் காவல் நிலையில் அனுமதி பெற்ற வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பயில்வான் ரங்கநாதன், அஜித்தின் தந்தை மறைந்த சமயத்தில் துக்க வீட்டில் கேமராக்கள் வர வேண்டாம் என்று அஜித் கோரிக்கை விடுத்தார்.
அதனால் மீடியாக்கள் யாரும் போகவில்லை. அதை மாதிரி விஜய் ஆண்டனி செய்யவில்லை என்று மேடையில் பேசியுள்ளார். தற்போது இவரின் பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.