விக்னேஷ் சிவனை கல்யாணம் பண்ணிட்டு ஒழுங்கா இருந்திருக்கலாம்!! நயன்தாராவை கண்டபடி பேசிய பயில்வான்..
முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை நயன்தாரா பற்றிய விவகாரம் தான் சமீபகாலமாக பெரியளவில் பேசப்பட்டு வருகிறது. இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்த நாளில் இருந்தே நயன் தாரா பற்றி விவாதம் அதிகரித்து வருகிறது.
சமீபத்தில் தன்னுடைய திருமண ஆவணப்படத்தில் தனுஷுடன் ஏற்பட்ட பிரச்சனை முதல் பல விஷங்களை பலர் பலவிதமான கருத்துக்களை முன்வைத்து வருகிறார்கள்.
பயில்வான்
அந்தவகையில் பயில்வான், நயன்தாரா தன் கணவர் விக்னேஷ் சிவனை பற்றி சமீபத்தில் பேசியது குறித்து சில கருத்துக்களை முன் வைத்துள்ளார். நயன்தாரா முன்பெல்லாம் பேசவே மாட்டார். இப்போது அவர் பேசினாலே சர்ச்சையாகிவிடுகிறது. 50 வருடங்களுக்கு முன் சினிமாவில் நடிக்க வந்தது மாதிரி நயன்தாரா பேசுகிறார். தான் நடிக்க வந்த சமயத்தில் நிறைய நடிகைகள் இரண்டாம் திருமணம் செய்து கொண்டதாகவும், அது வெற்றிக்கரமாகவும் இருந்தது.
கொடுமையை அனுபவிக்கிறாரா
யாராவது எச்சில் இலையில் சாப்பிடுவார்களா? இந்தக்காலத்தில் கணவர் சாப்பிட்ட தட்டி மனைவிகூட சாப்பிடுவதில்லை. நயன் தாரா நடிகை தானே. புதிதாக ஒருவரை திருமணம் செய்துகொள்ள வேண்டியதுதானே. பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்கு பின் விக்னேஷ் சிவனை திருமணம் செய்தார். இப்போதாவது சரியாக இருக்கலாமே. ஆனால் விக்கியை திருமணம் செய்ததில் இருர்ந்து குற்ற உணர்ச்சியோடு இருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்.
விக்னேஷ் சிவனை மட்டும் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்திருந்தால் விக்கியின் பெயர் நன்றாக இருந்திருக்கும் என்று கூறுகிறார். இத்தனை நாட்களாக கொடுமையை அனுபவிக்கிறாரா விக்னேஷ் சிவன்? ஒருவேலை நயன் தாராவின் கூஜாவாக விக்னேஷ் சிவன் இருக்கிறாரோ என்று தான் எங்களுக்கு தோன்றுகிறது என்று பயில்வான் விமர்சித்து பேசியிருக்கிறார்.