200 கோடி சம்பளம்.. விஜய்யின் தலைமுடிக்கு என்ன பிரச்சனை!! குண்டைத்தூக்கி போட்ட பயில்வான் ரங்கநாதன்

Vijay Gossip Today Bayilvan Ranganathan
By Edward Feb 24, 2024 04:30 AM GMT
Report

200 கோடி சம்பளம்.. விஜய்யின் தலைமுடிக்கு என்ன பிரச்சனை!! குண்டைத்தூக்கி போட்ட பயில்வான் ரங்கநாதன் தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், கோட் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் தன்னுடைய தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் செயல்பாடுகளிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

இதற்கிடையில் விஜய் மீது தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பல விமர்சனங்கள் எழுந்தும் வருகிறது. அதில் முக்கிய ஒன்றாக இருப்பது விஜய்யின் தலைமுடி தான். சில ஆண்டுகளாக விதவிதமாக விக் பயன்படுத்துகிறார் என்று நெட்டிசன்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறது. விஜய்யின் தலைமுடிக்கு என்ன பிரச்சனை என்று பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் ஒரு குண்டைத்தூக்கி போட்டுள்ளார்.

விஜய்க்கு தலைமுடி உதிர்ந்துவிட்டதால் விக்கினை போட்டு வந்துள்ளார். ஆனால் இன்றுவரை வெள்ளை முடி இருந்தாலும் அவரது அப்பா, அம்மாவிற்கு இந்த பிரச்சனையில்லை. விஜய்க்கு ஏன் இப்படியென்றால் ரசாயனம் கலந்த சிலவற்றை போட்டதால் இப்படியொரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதுபோன்று ரஜினிக்கும் எம்ஜிஆருக்கும் ஏற்பட்டது.

ஆனால் அவர்கள் வேறுமாதிரியான முடிவை எடுத்து வந்தனர். விஜய் இதற்கு எதிர்மாறான ஒருநாளை தோப்பாவை மாற்றிமாற்றி வந்துள்ளார் விஜய். அப்படி விஜய் வைக்கும் தோப்பாவை அஜித் ரசிகர்கள் விஜய்யை கலாய்த்து வருகிறார்கள். இதனால் விஜய்யை ஒரே தலைப்பாகையை பயன்படுத்துங்கள் என்று பயில்வான் ரங்கநாதன் வேண்டுகோளாக கூறியுள்ளார்.

ஏனென்றால் என் மகனே விஜய் ரசிகர் தான் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் விஜய் இப்போது விக் எல்லாம் பயன்படுத்துவதில்லை, அதற்கான சிகிச்சை மேற்கொண்டு சொந்த முடியில் தான் படத்தில் நடித்தும் வெளியில் வந்தும் வருகிறார் என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து பயில்வானை விளாசி வருகிறார்கள்.