பிரேக் அப் செய்த அன்ஷிதாவுக்கு விஜே பிரியங்கா கொடுத்த அட்வைஸ்!! இதான் அதுக்கு காரணமாம்..
பிக்பாஸ் சீசன் 8
பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த ஆண்டு அக்டோபர் 6 ஆம் தேதி ஒளிப்பரப்பாகத் தொடங்கி 2025 ஜனவரி 19 ஆம் தேதி இரவு கிராண்ட் ஃபினாலே நடந்து முடிந்தது. பிக்பாஸ் 8ல், டைட்டில் வின்னராக முத்துக்குமரன் தேர்வு செய்யப்பட்டு ரூ. 40 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பரிசினை தட்டிச்சென்றார்.
என்னை காயப்படுத்தி அனுப்பிய ஒரு நபரின் வீட்டுக்கே சென்று, நீங்கள் என் வாழ்க்கைக்குத் தேவையில்லை என்று தைரியமாக கூறிவிட்டேன் என்றும் விஜய் டிவியில் புது பிராஜெக்ட்டில் இணைந்து ஷூட்டிங்கில் கலந்து வருவதாக அன்ஷிதா கூறியிருந்தார்.
அன்ஷிதா - பிரியங்கா
இந்நிலையில் அன்ஷிதா அளித்த சமீபத்திய பேட்டியில், நான் பாசத்திற்கு ஏங்குபவள். அதனால் அந்த நபரிடம் நான் முதலில் அன்பிற்காக பலமுறை கெஞ்சியுள்ளேன். ஆனால் காதல் யாரையும் கெஞ்ச வைக்காது. கெஞ்ச வைத்தால் அது காதலாக இருக்காது. நான் அப்போது என்னை நேசிக்காமல் இருந்துவிட்டேன் என புரிந்து கொண்டேன்.
ஆனால் இப்போது நான் என்னை மிகவும் நேசிக்கிறேன். ஒருமுறை விஜே பிரியங்கா அக்கா, எப்போது உன்னை எதற்காகவும் விட்டுக்கொடுக்காதே. சுயமரியாதை யாருக்கும் விட்டுக்கொடுக்காதே. பிரியங்கா அக்கா சொன்ன விஷயம் பிக்பாஸ் வீடு கொடுத்த தைரியம்.
என்னை இறங்கி ஓடு என்கின்றது. நான் அவரை வேண்டாம் என்று அவரது முகத்திற்கு நேராக சிரித்துக்கொண்டே சொன்னேன் என அன்ஷிதா பேட்டியில் தெரிவித்துள்ளார்.