யாருப்பா உண்மையை சொல்றது!! வலுக்கும் விராட் கோலி பிரச்சனை..

ganguly bcci viratkohli indiancricket
By Edward Dec 17, 2021 05:00 PM GMT
Report

இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது இரு பிளவுகளாக மாறி குரூப்பிஷம் நடந்து வருவதாக இணையத்தில் செய்திகள் வைரலாகி வருகிறது. அதற்கு காரணமாக இருந்தது ஐசிசி டி20 உலக கோப்பையில் இந்திய அணி அரை இறுதி சுற்றுக்கு கூட போகமுடியாமல் மதில்மேல் பூனையை போல் இருந்து வெளியேறியது தான்.

இதன் முழு பொறுப்பு கேப்டன் விராட் கோலிக்கே சென்றது. இதனால் அடுத்தடுத்த டெஸ்ட் போட்டி, ஓடிஐ போட்டிகளில் இருந்தும் கேப்டம் பதிவியில் இருந்தும் விராட் நீக்கப்பட்டார்.

இருந்தபோதிலும் விராட் தன்னுடைய கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன் என்று கூறியதும், வேண்டாம் என்று பிசிசிஐ அதிகாரிகள் கேட்டு வந்ததாகவும், அதை விராட் கேட்கவே இல்லை என்று கங்குலி கூறியிருந்தார்.

இதனை மறுத்து விராட் கோலி அப்படி யாரும் என்னிடம் கேட்கவில்லை என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். இதில் யார் கூறுவது உண்மை என்று பலர் குழம்பி வருகிறார்கள்.

ஆனால் எனக்கும் ரோஹித் சர்மாவிற்கு இடையில் எந்த பிரச்சனையும் இல்லை. அவர் கேப்டன்ஷிப்பில் விளையாட நான் தயார் தான். ஓய்வு பற்றி நான் யோசித்ததே இல்லை என்றும் குறிப்பிட்டு பேசியுள்ளார் விராட் கோலி.