32 வயதில் அந்த நபருடன் ரகசிய காதல்!! விரைவில் திருமணம் செய்யப்போகும் நடிகை பூஜா ஹெக்டே..
முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி சரியான வரவேற்பு பெறாததால் தெலுங்கு சினிமா பக்கம் சென்றவர் நடிகை பூஜா ஹெக்டே. தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து வந்த பூஜா ஹெக்டே, அல்லு அர்ஜுடன் இரு படங்களில் நடித்து பிரபலமானாவர்.
தென்னிந்திய நடிகையாகவும் கோடியில் சம்பளம் வாங்கும் நடிகையாகவும் மாறி தமிழில் விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்தார்.
சமீபத்தில் பிரபாஸுடன் ராதே ஷ்யாம், சிரஞ்சீவியின் ஆச்சாரியா, சல்மான் கானுடன் இந்தி படத்திலும் நடித்து போதிய வரவேற்பு பெறாமல் தோல்வியை சந்தித்தார்.
சமீபத்தில், நடிகை பூஜா ஹெக்டே கிளாமர் போஸ் கொடுத்து சேலையில் போட்டோஷூட் எடுத்து புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.
இந்நிலையில் பூஜா ஹெக்டே கிரிக்கெட் வீரரை ரகசியமாக காதலித்து வருவதாகவும் இரு வீட்டாரின் சம்மதமும் கிடைத்துவிட்டதால், அவரை விரைவில் திருமணம் செய்யவுள்ளார் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் உண்மையா என்று அதிகாரப்பூர்வ செய்தி இன்னும் வெளியாகவில்லை.