இணையத்தில் கசிந்த பீஸ்ட் படத்தின் காட்சி.. ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்
vijay
beast
leaked picture
By Karthick Raja
விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் முதல் முறையாக விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, செல்வராகவன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பீஸ்ட் படத்திற்கு இசை வெளியீட்டு விழா கிடையாது என அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியானது. மேலும், நாளை பீஸ்ட் படத்தின் ரிலீஸ் தேதியுடன், மோஷன் போஸ்டர் வெளியாகும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், பீஸ்ட் படத்தின் மோஷன் போஸ்டரில் இருந்து காட்சி ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. இதனை பார்த்த விஜய்யின் ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர். இதோ அந்த புகைப்படம்..
