மண்டைல இருக்க கொண்டைய மறந்திட்டீயே? பீஸ்ட் டிரைலர் பரிதாபம்..
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருந்து வரும் நடிகர் விஜய் மாஸ்டர் படத்திற்கு பிறகு நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார்.
பொங்கல் கழித்து வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் கொரோனா தொற்று காரணமாக தற்போது ஏப்ரல் 13 ஆம் தேதி தள்ளிப்போகியுள்ளது. படத்தின் மீது ரசிகர்கள் அதிகளவில் எதிர்ப்பார்ப்பை தூண்டும் விதமாக அரபிக்குத்து, ஜாலி ஓ ஜிம்கானா பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்தது.
இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சில காரணங்களால் தடை செய்துள்ள பீஸ்ட் குழு மீது ரசிகர்கள் மிகுந்தை சங்கடத்தில் இருந்து வந்தனர். இதனால் சில தினங்களுக்கு முன் முதுகில் குத்திய நெல்சன், சன் பிக்சர்ஸ் என்று ஹாஸ்டேக்கினை வைரலாக்கினர்.
தற்போது பீஸ்ட் படத்தின் டிரைலர் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. டிரைலரில் மொக்கை வாங்கிய சம்பவங்களை நெட்டிசன்கள் இணையத்தில் கலாய்த்து வருகிறார்கள். தற்போது விஜய் விமானம் ஓட்டும் போது ஏர் மாஸ்க் போடாமல் இருப்பதை கலாய்த்து மீம்ஸ் வெளியாகி வருகிறது.
Where the fuck is oxygen mask...?Joseph is the only actor who can fly in 50,000 feet without mask.#Gurka2 pic.twitter.com/Oy2fUZnoXQ
— Rooney (@rooney_aj_) April 2, 2022