தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தின் வில்லன் இந்த இயக்குநரா? அதிர்ச்சியில் ரசிகர்கள்..

vijay selvaraghavan nelsondilipkumar beast sunpicture
By Edward Aug 07, 2021 11:30 AM GMT
Report

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருந்து தற்போது இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் பீஸ்ட படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் டைட்டில் சமீபத்தில் வெளியாகி டிரெண்ட்டானதை தொடர்ந்து லாக்டவுன் முடிந்து படப்பிடிப்பை தொடங்கியுள்ளார். இந்நிலையில் இப்படத்தில் இயக்குநர் செல்வராகவன் இணைந்துள்ளதாக சன் பிக்ஸ்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நடிகை கீர்த்தி சுரேஷிடன் சாணிக்காயிதம் படத்தில் நடித்து வெளியாகமல் இருக்கும் நிலையில் செல்வராகவன் விஜய் படத்தில் இணைந்திருப்பது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. மேலும், வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளார் என்றும் எப்படி இவர் செட் ஆகுவார் என்றும் பலர் கருத்துக்களை தெரிவித்தும் வருகிறார்கள்.

பல வில்லன் நடிகர்கள் இருக்கையில் இயக்குநர் செல்வராகவனை தேர்வு செய்தது, இயக்குநர் செல்வராகவன் விஜய்யுடன் முதன் முதலில் இணைந்திருப்பதும் நெல்சன் திலீப்குமாரிடம் அதிகளவில் எதிர்ப்பார்ப்புகள் கூடி வருவதாகவும் கூறி வருகிறார்கள்.

மேலும், யோகிபாபு, விடிவி கணேஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் இணைந்துள்ளார்கள் என்ற அதிகார பூர்வ தகவல் வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.