மகன் நடித்த படம் மட்டும் நல்ல படமா? பாக்யராஜை விளாசும் ரசிகர்கள்..
தமிழில் ஜாம்பவான் இயக்குனராக இருந்த பாரதிராஜாவின் உதவி இயக்குனராக இருந்து பின் தனக்கென பல முகங்களை கொண்டு தமிழ் சினிமாவில் வியந்து பார்க்க வைத்த இயக்குனராக திகழ்ந்தவர் கே பாக்யராஜ்.
சிறந்த இயக்குனராகவும் நடிகராகவும் மட்டும் இல்லாமல் பத்திரிக்கையாளர், வசனகர்த்தா, திரைக்கதை அமைப்பாளர் என பன்முகத்திறமைக்கொண்டு விளங்கியவர்.
தற்போது சில படங்களில் குணச்சித்திர கதாபத்திரத்தில் நடித்து வரும் பாக்யராஜ் சமீபத்தில் கடைசி காதல் கதை படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு மேடையில் பேசியுள்ளார். கொரோனா வந்து சினிமாத்துறை கஷ்டப்படும்போது நான் மிகவும் வருத்தப்பட்டேன்.
இப்போது வரும் ஒருசில படங்களை விட கொரோனாவே பரவாயில்லை என்று தோன்றுகிறது என கூறியுள்ளார். அந்த அளவிற்கு மோசமானதாக அமைந்து வருகிறது என்று கூறியுள்ளார். இதனை ரசிகர்கள் அதில் சமீபத்தில் உங்கள் மகனுடன் நடித்த முருங்கைக்காய் சிப்ஸ் படமும் இருக்கிறதா என்று கேட்டு கலாய்த்து வருகிறார்கள்.