ஆளாளுக்கு வெளிய போனா சீரியல் என்ன ஆகுறது! பாரதி கண்ணாமாவுக்கு வந்த சோதனை..
anjali
bharathikannamma
kanmani
visush
By Jai
தொலைக்காட்சி தொடர்களில் மிகபெரிய வரவேற்பை பெற்று வரும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா. ஆரம்பத்தில் கண்ணம்மாவாக நடித்த நடிகை ரோஷினி ஹரிபிரியன் படங்களின் வாய்ப்பு வந்ததால் சீரியலில் இருந்து விலகினார்.
அவருக்கு பதில் வினுஷா என்பவர் நடித்து வருகிறார். மேலும் அகிலனும் அதற்கு முன் விலகி வேறொருவர் நடித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த சீரியலில் கண்ணம்மாவிற்கு தங்கை கதாபாத்திரமாக நடித்து வந்தவர் கண்மணி.
அஞ்சலி ரோலில் நடித்து நல்ல வரவேற்பை பெற்ற கண்மணி தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகியுள்ளாராம். நடிகை கண்மணி வேறொரு சேனலில் ஒளிப்பரப்பாகும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால் இந்த காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அவருக்கு பதில் வேறொருவர் நடிக்கவுள்ளதாக சீரியல் இயக்குனர் புலம்பி வருகிறார்.