பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸை ஓரங்கட்டிய பாக்கியலட்சுமி! அம்மானா சும்மாவா...வீடியோ..
தொலைக்காட்சி தொடர்கள் தான் தற்போதைய தாய்மார்களின் குணங்களை எடுத்திக்காட்டி வருகிறது. அப்படியாக சமீபத்தில் வெளியாகும் சீரியல்கள் தாய்மார்களை தாண்டி அனைத்து தரப்பு வயதினரையும் கவர்ந்து வருகிறது. அந்தவகையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல்கள் இளைஞர்கள் மத்தியில் கவர்ந்து இழுத்து வருகிறது.
அதில் பெரிய ஹிட் கொடுத்து வரும் சீரியல்களாக பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ், ராஜா ராணி 2 இடம் பிடித்து தக்கவைத்து வருகிறது. இந்நிலையில் அந்த சீரியல்களை தூக்கி தள்ளி தற்போது பாக்கியலட்சுமி சீரியல் பெரிய மைல் கல்லை தொட்டுள்ளது. அம்மா படும் கஷ்டத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த சீரியல் கடந்த சில வாரங்களாக அதிக பார்வையாளர்களை பெற்று வருகிறது.
அதற்கு காரணம் பள்ளியில் படித்து வரும் பாக்கியலட்சுமியின் மகள் இனியா ஆண் நண்பருடன் சேர்ந்து தியேட்டருக்கு சென்று படம் பார்த்து பள்ளியில் மாட்டிக்கொண்டதுதான். இந்த வாரத்தில் ஒளிப்பரப்பான எபிசோட்டில் இனியாவை பள்ளி நிர்வாகம் டிசி கொடுத்து அனுப்பியதால் பதட்டமான காட்சிகளை ஒளிப்பரப்பாக்கியது.
இந்நிலையில் வரும் வாரத்தில் இனியாவிற்கு என்ன ஆகும் பாக்கியலட்சுமி என்ன செய்வார்கள் என்று எதிர்ப்பார்த்த நிலையில், தற்போது அடுத்தவார பிரமோ வீடியோ வெளியிட்டுள்ளது சீரியல். அதில் பள்ளி தலைமை ஆசிரியரின் வீட்டிற்கு பாக்கியா சென்று காலில் விழுந்து கெஞ்சியுள்ளார். தற்போது அந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் நெகிழ்ச்சியடைந்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.