முதலிரவுக்காக காத்திருக்கும் ரோஹித்.. கருவை கலைக்க மாடியில் வெண்பா போட்ட பெரிய பிளான்..

Bharathi Kannamma Serials Farina Azad
By Edward Nov 05, 2022 02:09 PM GMT
Report
110 Shares

பிரபல தொலைக்காட்சி சேனலில் 2019ல் இருந்து ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. சமீபத்தில் வெண்பாவின் திருமண விசயம் பற்றிய காட்சிகள் ஒளிப்பரப்பாகி வருகிறது. அந்தவகையில் குடும்பமெ காத்திருக்கும் திருமண மண்டபத்தில் இருந்து பாரதிக்காக வெண்பா கோவிலுக்கு செல்ல அங்கு பாரதி மாட்டிக்கொள்கிறார்.

இந்த விசயத்தை வீட்டு வேலைக்காரி சாந்தி மூலம் கண்ணம்மா தெரிந்து கொள்ள வீட்டார் அனைவரும் அந்த கோவிலுக்கு செல்கிறார்கள். அதேசமயம் பாரதி மதில்மேல் பூனைப்போல் தாலி கட்ட தயக்கம் காட்டியுள்ளார்.

முதலிரவுக்காக காத்திருக்கும் ரோஹித்.. கருவை கலைக்க மாடியில் வெண்பா போட்ட பெரிய பிளான்.. | Bharathi Kannamma Latest Venba Apotion Plan

தாலிக்கடும் நேரத்தில் கண்ணம்மா உள்ளே புகுந்து வெண்பாவின் கனவில் மண்ணை அள்ளி போடும் விதமாக கன்னத்தில் பளார் விட்டார். அதோடு குடும்பமே வெண்பாவையும் பாரதியையும் சரமாறியாக கேள்வி கேட்டு செல்ல, கடைசியாக வெண்பா கழித்தில் ரோஹித் தாலிக்கட்டி மனைவியாக ஏற்கிறார்.

இந்நிலையில் திருமணம் முடிந்து வீட்டிற்கு திரும்பிய வெண்பாவிடம் முதலிரவுக்காக அனுப்பி வைக்க அவரது அம்மா வழி அனுப்புகிறார். ரோஹித் முதலிரவுக்காக காத்திருக்க வெண்பா மாடியில் இருந்து கொண்டு பாரதியே இல்லை அப்ப ஏன் இந்த குழந்தை என்று மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார்.

உடனே மருத்துவமனைக்கு ரோஹித் கூட்டிச்செல்ல, குழந்தைக்கு ஒன்றும் ஆகவில்லை என்று கூறியதால் வெண்பா கடுமையாக டென்ஷன் ஆகியுள்ளார். இப்படியே போனால் இயக்குனர் கதையை முடிக்கமாட்டார் என்று தெரிகிறது என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.