பாரதிராஜா இப்போ எப்படி உள்ளார்!! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த உறவினர்கள்..
பாரதிராஜா
16 வயதினிலே என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி மிகப்பெரிய இடத்தினை பிடித்தவர் தான் இயக்குநர் இமயம் பாரதிராஜா. ஸ்டூடியோவில் செட் போட்டு படம் எடுத்து வந்த காலத்தில், இயற்கையோடு இயற்கையாக இணைந்து தமிழ் திரையுலகிற்கு கொண்டு வந்தவர் பாரதிராஜா.

இப்படத்தினை தொடர்ந்து பல கலைஞர்களை தன் படத்தில் அறிமுகப்படுத்தி டாப் இடத்திற்கு கொண்டு வந்தார்.
சமீபகாலமாக வயது மூப்பு காரணமாக நடிப்பில் இருந்தும் இயக்குவதில் இருந்தும் விலகியிருக்கிறார். கடந்த மார்ச் மாதம் தான் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மாரடைப்பால் உயிரிழந்தார்.
எப்படி உள்ளார்
இதனையடுத்து சில நாட்களுக்கு முன் பாரதிராஜா, உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து ஓய்வில் இருந்து வரும் அவருக்கு வீசிங் போன்ற சுவாச பிரச்சனை ஏற்பட்டதால் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் பாரதிராஜா உடல்நிலை எப்படி உள்ளது என்று அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
பாரதிராஜா உடல்நிலை குறித்து தகவல்கள் உண்மையில்லை, அவர் நலமுடன் இருக்கிறார். தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது, விரைவில் வீடு திரும்புவார் என்று கூறியுள்ளனர்.