படுத்தப்படுக்கையில் இருந்த மகன்!! விஜய் கொடுத்த ஊக்கத்தால் பொலிவடைந்தான்!! நடிகர் நாசர் நெகிழ்ச்சி..
ஜனநாயகன்
நடிகர் விஜய்யின் கடைசி படமாக உருவாகியுள்ள ஜனநாயகன் படத்தின் ஆடியோ லான்ச் டிசம்பர் 27 ஆம் தேதி மலேசியாவில் விமர்சையாக நடைபெற்றது. இதனையடுத்து படம் வரும் ஜனவரி 9 ஆம் தேதி பொங்கல் தினத்தை முன்னிட்டு ரிலீஸாகவுள்ளது.
ஜனநாயகன் படத்தில் விஜய்யுடன் நடிகை பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, நாசர், பிரியாமணி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்களில் நடிப்பில் அனிருத் இசையில் உருவாகியிருக்கிறது.

நாசர் நெகிழ்ச்சி
இந்நிலையில் ஜனநாயகன் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் நாசர், சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
அமைதியும் பணிவும் தவிர கூர்மையான ஆயுதம் எதுவுமில்லை, அதுவ்கே உங்களின் அடையாளம். படுத்தப்படுக்கையாக இருந்த என் மகனை எழுந்து நடக்க வைத்தவர் நீங்கள்(விஜய்). இதை பொதுவெளியில் அடிக்கடி சொல்ல வேண்டாம் என்று கூறியிருக்கிறீர்கள்.
அதைச்சொல்ல வேண்டியது என் கடமை. இந்த மேடையில், இன்னும் எத்தனையோ மேடைகளில் அதை சொல்லுவேன். நீங்கள் படத்தில் மீண்டும் நடிக்க வேண்டும், இது எங்களுடைய வேண்டுகோள் என்று தெரிவித்துள்ளார்.