நான் 4 பேரை காதலித்தேன்!! மேடையில் உண்மையை போட்டுடைத்த இயக்குனர் பாரதிராஜா..
Gossip Today
Bharathiraja
By Edward
தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயம் என்று கூறப்படும் பாரதிராஜா தற்போது பல ஆண்டுகள் கழித்து மாடர்ன் லவ் என்ற ஆந்தலாஜி தொடர் ஒன்றினை இயக்கியுள்ளார்.
அந்த தொடரின் விழாவில் கலந்து கொண்டு பேசிய பாரதிராஜா, இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவை பார்த்து வியந்ததாக கூறியிருந்தார்.
வித்தியாசமான மனுஷன் என்றும் ஆரவாரம் இல்லாத அழகான காதல் கதைகளை எடுத்து கூறக்கூடியவர் என்றும் அவரால் பலவற்றை கற்றுக்கொண்டதாக கூறியிருந்தார்.
தொடர்ந்து பேசிய பாரதிராஜா, தனக்கு 84 வயதாகியும் இதுவரை காதலித்து வருவதாகவும் தன்னுடைய 9 வயதில் முதல் காதல் உருவானதாகவும் தெரிவித்தார்.
மேலும் தற்போது வரை 4 காதல்கள் என் வாழ்க்கையில் வந்ததாகவும் பாரதிராஜா பல ஆண்டு உண்மையை கூறியிருக்கிறார்.