நடிகைகளை கன்னத்தில் அறைந்த பாரதிராஜா! மகனை மட்டும் அம்போன்னு விட்டுட்டாரே?

bharathiraja priyamani tamilactress kangalalkaithusei
By Edward Feb 08, 2022 09:20 AM GMT
Report

தமிழ் சினிமாவின் லிஜெண்ட்டரி இயக்குனர் என்ற பெயரை பெற்றவர் பாரதிராஜா. பல இயக்குனர்களை உருவாக்கிய பெருமையுடன் பல நட்சத்திரங்கள் முக்கிய இடத்தினை பெற அவரது இயக்கமும் உதவியது. அப்படி பல நடிகைகள் அவரால் உயர்ந்த இடத்திற்கு சென்றுள்ளனர்.

பாரதிராஜா படங்களில் நடிக்கும் நடிகைகள் நடிப்பில் சிறந்து விளங்குவார்கள் என்று கூறக்கேட்டிருப்போம். அப்படி உருவானவர்கள் தான் ராதிகா, ராதா, ரேவதி உள்ளிட்ட நடிகைகள். அந்தவரிசையில் கண்களால் கைது செய் படத்தின் மூலம் பாரதிராஜா இயக்கத்தில் அறிமுகமானார் பிரியாமணி.

அப்படத்தில் சரியாக நடித்து பாரதிராஜை ஈர்க்கவேண்டும் என்று நம்பியிருந்தாராம். ஆனால் நடிப்பு சரியாக இல்லை என்று பாரதிராஜா பிரியாமணி கன்னத்தில் பளார் விட்டுள்ளார். அதன்பின் தான் நல்ல நடிப்பு கிடைத்து பருத்திவீரன் வாய்ப்பை பெற்றுள்ளார்.

பாரதிராஜா என்றாலே அப்படிதான் நடிகைகளை அடித்து நடிக்கவைப்பாராம். இதேபோல் அவர் மகனையும் அடித்து நடிப்பு வரவழைத்திருக்கலாமே என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.