தொந்தரவு செய்தவன் மண்டையை உடைத்த கயாடு லோஹர்!! சாஃப்ட் பொண்ணு கிடையாதாம்..

Atharvaa Tamil Actress Kayadu Lohar
By Jai Jul 02, 2026 06:45 AM GMT
Report

கயாடு லோஹர்

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை கயாடு லோஹர். கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழிகளில் நடித்த கயாடு, டிராகன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறினார். தற்போது இதயம் முரளி, இம்மோர்டல், மஞ்சனத்தி, சூர்யா 48 உள்ளிட்ட பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

தொந்தரவு செய்தவன் மண்டையை உடைத்த கயாடு லோஹர்!! சாஃப்ட் பொண்ணு கிடையாதாம்.. | Kayadu Lohar Recalls School Harassment Incident

வரும் ஜூலை 10 ஆம் தேதி இதயம் முரளி படம் ரிலீஸாகவுள்ள நிலையில் பட பிரமோஷனுக்காக அதர்வா, ப்ரீத்தி முகுந்தனுடன் பேட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார் கயாடு. சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் ஏற்பட்ட சம்பவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார்.

தொந்தரவு செய்தவன்

அப்போது பேசிய கயாடு, நான் 10 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது பள்ளியிலிருந்து வீட்டுக்கு செல்லும் வழியில் சில இளைஞர்கள் தினமும் காத்திருந்து ஈவ்டீசிங் செய்து வந்தனர்.

முதல் இரண்டு நாட்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் பொறுத்துக்கொண்டேன். நிலைமை சரியாகிவிடும் என்று நினைத்தேன். ஆனால் 3வது நாளும் அதே தொல்லை தொடர்ந்ததால் தன்னுடைய பொறுமை எல்லையை தாண்டிவிட்டது.

தொந்தரவு செய்தவன் மண்டையை உடைத்த கயாடு லோஹர்!! சாஃப்ட் பொண்ணு கிடையாதாம்.. | Kayadu Lohar Recalls School Harassment Incident

அருகில் கிடந்த கல்லை எடுத்து, தன்னை தொடர்ந்து தொந்தரவு செய்தவர்களில் ஒருவனை தாக்கினேன். அந்த கல் அவரது தலையில் பட்டு காயம் ஏற்பட்டது. அந்த சம்பவம் நடந்ததில் இருந்து மீண்டும் அவர்கள் என்னை தொந்தரவு செய்யவில்லை.

என்னை பார்த்தால் மிகவும் அமைதியான, சாஃப்ட்டான பெண் என்று அனைவரும் நினைப்பார்கள், ஆனால் யாராவது எல்லை மீறி தவறாக நடந்துகொண்டால், நான் அமைதியாக இருக்க மாட்டேன். அப்போது என் ரியாக்ஷன் முற்றிலும் வேறு மாதிரியாக இருக்கும் என்று சிரித்தபடியே கயாடு லோஹர் தெரிவித்துள்ளார்.