மது பார்ட்டியில் ரஜினியை அறைந்த பாரதிராஜா!! சவகாசமே வேண்டாம்னு இளையராஜா எடுத்த முடிவு..
சினிமாத்துறையில் மது பார்ட்டி கலாச்சாரம் அதிகரித்து வருகிறது என்று பல விமர்சகர்கள் கூறி அதிர்ச்சி கிளப்பி வருகிறார்கள். அந்தவகையில் சமீபத்தில் பிரபல பாடகி சுசித்ரா, நடிகர் நடிகைகள் கொடுத்த மது பார்ட்டி மற்றும் போதை பொருள் அருந்தும் சம்பவங்களை பற்றி ஓப்பனாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். சுசித்ரா கூறிய இந்த குற்றச்சாட்டிற்கு எந்த நட்சத்திரங்களும் எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதி காத்து வருவது தான் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

இந்நிலையில் மது பார்ட்டி கலாச்சாரம் பற்றி சினிமா விமர்சகர்களும் பத்திரிக்கையாளர்களும் பல கருத்துக்களை கூறி வருகிறார்கள். அந்த வகையில் பிரபல சினிமா விமர்சகர் அந்தணன், ஒரு திடுக்கிடும் தகவலை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார். சக்சஸ் பார்ட்டியில் பத்திரிக்கையாளர்களை அழைத்து நடப்பது ஒரு பக்கம் இருந்தாலும், தனிப்பட்ட முறையில் அவர்களின் நண்பர்கள் வட்டாரத்தில் பார்ட்டி நடக்கும்.

அது இன்று நேற்று நடந்த விஷயம் கிடையாது, இளையராஜாவுக்கும் ரஜினிகாந்துக்கும் சண்டை வந்ததே பார்ட்டியில் தான். சண்டை கிடையாது, இளையராஜா குடியை விட்டதே அந்த மாதிரியான ஒரு பார்ட்டியில் தான். பாரதிராஜா, ரஜினி, இளையராஜா, கங்கை அமரன் என்று அவர்களின் நண்பர்கள் ஒரு பார்ட்டியில் கலந்து கொண்டனர்.
ரஜினி வருவதற்கு தாமதமானது, அதற்கு காரணம் சிகப்பு ரோஜாக்கள் படத்தில் தன்னை ஏன் நடிக்க வைக்கவில்லை என்று பாரதிராஜா மீது ரஜினி சண்டை போட்டாரா என்று எனக்கு தெரியாது? எனக்கு மறந்துபோச்சு. அப்போது ரஜினி அது பற்றி கேட்கும் போது அவர் ஒரு வார்த்தை சொல்ல, பாரதி ராஜா ஒரு வார்த்தை சொல்ல, கடைசியில் பாரதிராஜா எழுந்து ரஜினிகாந்தை அடித்துவிட்டார்.
அந்த பார்ட்டி கலவரமான உடனே, இளையராஜா, நாம் குடிப்பதால் தான் இந்த பார்ட்டியில் எல்லாம் கலந்து கொள்ள முடிகிறது என்று நினைத்து அப்போதில் இருந்து குடியை நிறுத்திவிட்டார் இளையராஜா என்று அந்தணன் தெரிவித்துள்ளார்.