13 வருடத்திற்கு பின் ரீல் காதலியுடன் வீடியோ காலில் பேசிய அஜித்.. இதோ புகைப்படம்

Ajith Kumar Bhavana
By Dhiviyarajan May 01, 2023 08:00 AM GMT
Report

சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் தன்னுடைய விடா முயற்சியால் தமிழ் சினிமாவில் டாப் நடிகராக உயர்ந்தவர் தான் அஜித் குமார்.

தற்போது இவர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிக்க போகிறார். இப்படத்திற்கு தலைப்பு விடா முயற்சி என்று வைத்துள்ளனர். இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று வெளியானது.

13 வருடத்திற்கு பின் ரீல் காதலியுடன் வீடியோ காலில் பேசிய அஜித்.. இதோ புகைப்படம் | Bhavana Talk With Ajith Kumar In Video Call

மே 1 -ம் தேதி அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு பல பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல நடிகை பாவனா அஜித்தை வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். தற்போது பாவனா அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பாவனா அஜித்தும் சேர்ந்து அசல் என்ற படத்தில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு மக்கள் மோசமான விமர்சனமே கொடுத்தது குறிப்பிடத்தக்கது.