அப்பா கறாரா இருப்பார், வீட்டுல ஒரே மனஉளைச்சலா இருக்கும்.. வைரலாகும் பவதாரணி பேட்டி!
பிரபல பாடகியும், இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளுமான பவதாரிணி, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் இவர் ஆயுர்வேத சிகிச்சைக்காக இலங்கைக்கு சென்றிருந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் மறைவு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது பவதாரிணி பேட்டி அளித்த பழைய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர், வீட்டில் எப்போதும் மிருதங்கம் சத்தம், இன்னொரு பக்கம் யுவன் பாடிக்கொண்டே இருப்பார். எல்லா சத்தமும் சேர்ந்து ஒரே மனஉளைச்சலா இருக்கும்.
சில சமயங்களில் அழும் நிலைக்கு வந்துவிடுவேன்
அப்பா எல்லா இடங்களைப் போலவே, வீட்டிலும் கறாரா தான் இருப்பார். எங்க வீட்டில் டைனிங் டேபிளில் எல்லாரும் இசையமைத்த பாடல்களை அப்பாவிடம் போட்டு காட்டுவோம். அதை கேட்டவுடன் அப்பா correction
செய்வார் என்று பவதாரிணி கூறியுள்ளார்.