நடிகை பூமிகா தனது அழகை பராமரிக்க என்ன செய்கிறார் தெரியுமா.. இதோ அவரே கூறியுள்ளார்..
'பத்ரி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பூமிகா. இதன்பின் சூர்யா நடிப்பில் வெளியான 'சில்லுனு ஒரு காதல்' திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அளவில் பெயரை பெற்று தந்தது. இன்று வரை அப்படத்தில் பூமிகா நடித்திருந்த ஐஸ்வர்யா கதாபாத்திரத்தை யாராலும் மறக்கமுடியவில்லை.
தமிழில் மட்டுமின்றில், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய பல மொழிகளில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார். கடந்த 2007ஆம் ஆண்டு பரத் என்பவரை திருமணம் செய்துகொண்ட நடிகை பூமிகாவிற்கு ஒரு மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நடிகை பூமிகா சமீபத்தில் ஒரு பேட்டியில் அழகை பராமரிக்க செய்யும் விஷயங்கள் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், நான் எதை சாப்பிட்டாலும் மிதமான அளவில் தான் சாப்பிடுவேன். அதிகமாக தண்ணீர் மற்றும் பழங்களை எடுப்பேன்.
நேரத்திற்கு தூங்குதல், யோகா செய்தல் மன அமைதியையும் சருமத்திற்கு ஆரோக்கியமும் தருகிறது. நீச்சல் மற்றும் நடைப்பயிற்சியை ஒருபோதும் தவறவிடுவதில்லை என கூறியுள்ளார்.