சில்லுனு ஒரு காதல் நடிகை பூமிகாவை நினைவிருக்கா? இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க
விஜய் நடிப்பில் வெளிவந்த 'பத்ரி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பூமிகா. இதன்பின் சூர்யா நடிப்பில் வெளியான 'சில்லுனு ஒரு காதல்' திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அளவில் பெயரை பெற்று தந்தது.
இன்று வரை அப்படத்தில் பூமிகா நடித்திருந்த ஐஸ்வர்யா கதாபாத்திரத்தை யாராலும் மறக்கமுடியவில்லை. தமிழில் மட்டுமின்றில், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய பல மொழிகளில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார்.
கடந்த 2007ஆம் ஆண்டு பரத் என்பவரை திருமணம் செய்துகொண்ட நடிகை பூமிகாவிற்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில், நடிகை பூமிகா தனது மகனுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் பலரும், அட சில்லுனு ஒரு காதல் பட நடிகை பூமிகாவா இது? ஆளே மாறிவிட்டாரே என ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..

