மாதவனுக்கு ஜோடியாக நடிக்க மறுத்த நடிகை பூமிகா.. என்ன காரணம் தெரியுமா?
பூமிகா
தமிழில் சில படங்கள் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகை பூமிகா சாவ்லா. இவர் விஜய் நடிப்பில் வெளிவந்த பத்ரி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இப்படத்தை தொடர்ந்து ரோஜா கூட்டம், சில்லுன்னு ஒரு காதல், சித்திரையில் நிலாச்சோறு, களவாடிய பொழுதுகள், கொலையுதிர் காலம், கண்ணை நம்பாதே போன்ற படங்களில் நடித்துள்ளார்.
தற்போது ஜெயம் ரவி, பிரியங்கா மோகன் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள பிரதர் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார் பூமிகா.
கன்னத்தில் முத்தமிட்டால்
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், மணிரத்னம் இயக்கத்தில் மாதவன், சிம்ரன், நந்திதா தாஸ் உள்ளிட்டவர்கள் நடித்து 2002ல் வெளியான கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் நடிக்க தவறிவிட்டதாக கூறியிருக்கிறார் பூமிகா.
அந்த படத்தில் சிம்ரன் ரோலில் நடிக்குபடி தன்னிடம் கேட்டதாகவும் அந்தகாலக்கட்டத்தில் அம்மா ரோல் தனக்கு பொருந்தாது என்று தான் எண்ணியதால் நடிக்கமுடியாது என கூறியதாக பூமிகா சாவ்லா தெரிவித்திருக்கிறார்.