பூடான் சொகுசு கார் மோசடி!! துல்கர் சல்மான், பிருத்விராஜ் சிக்கியது இப்படித்தான்...
துல்கர் சல்மான், பிருத்விராஜ்
இந்திய சினிமாவின் கலக்கல் ஹீரோவாகவும் மம்முட்டியின் மகனாகவும் திகழ்ந்து மலையாள சினிமாவில் டாப் ஹீரோவாக திகழ்ந்து வருகிறார் நடிகர் துல்கர் சல்மான். கார்கள் மீது அதீதி காதல் கொண்ட துல்கர், போர்ஷே 911 கரேரா எஸ், Audi Q7, மெர்சிடிஸ் பென்ஸ் SLS AMG, ரேஞ்ச் ரோவர் வோக், BMW எம்3 உள்ளிட்ட பல விலையுயர்ந்த சொகுசு கார்களை வாங்கி குவித்திருக்கிறார்.
அவரைப்போ நடிகர் பிரித்விராஜும், MW 760Li, லம்போர்கினி உருஸ், போர்ஷே 911 GT3 டூரிங் உள்ளிட்ட சொகுசு கார்களை வாங்கி வைத்துள்ளார். கட்டுப்படுத்த முடியாத கார் காதலர்களான இவர்கள் இருவரும் சுங்கத்துறையினர் பிடியில் வசமாக சிக்கியிருக்கிறார்கள்.
பூடான் சொகுசு கார்
இந்தியாவை காட்டிலும் பூடான் உள்ளிட்ட பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள் மீதான வரி மிகவும் குறைவு. இதனால் அந்நாட்டில் விற்கப்படும் விலையுயர்ந்த கோடி ரூபாய் மதிப்பிலான கார்களை இந்தியாவிற்கு இறக்குமதி செய்து சட்டவிரோதமாக வரியை குறைத்து கோல்மால் செய்து விற்கப்படுகிறது.
குறிப்பாக வெளிநாட்டில் விற்கும் புது கார்களை அங்குள்ள ஒருவரின் முகவரியின் பெயரில் வாங்கப்பட்டது போல், ஆவணங்கள் தயார் செய்வார்கள். பின் அக்காரை இந்தியாவில் உள்ள ஒருவருக்கு செகண்ட் ஹேண்ட்டாக விற்பதுபோல், போலியாக ஆவணங்கள் தயார் செய்து அதில் வரியை குறைப்பார்கள்.
அக்குற்றத்தில் கைத்தேர்ந்த கார் மாஃபியா கும்பல்தான் சமீபத்தில் பூடானில் ஏலம் விடப்பட்ட ராணுவ உயர்ரக வாகங்கள் மற்றும் சொகுசு கார்களை பல கோடி ரூபாய்க்கு வாங்கி, அந்த கார்களை இமாசலப்பிரதேசம் வழியாக இந்தியாவுக்கு கடத்தி போலியான ஆவணங்கள் மூலம் செகண்ட் ஹேண்ட் கார்களாக ரிஜிஸ்டர் செய்யப்பட்டு விற்றுள்ளனர்.
ஆபரேஷன் நம்கூர்
இந்த தகவல்கள் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைக்க, வரி ஏய்ப்பு செய்து கார்கள் இறக்குமதி செய்த கும்பலையும், அவர்களிடம் இருந்து கார்கள் வாங்கியவர்களையும் டார்கெட் செய்து தூக்க ஆபரேஷன் நம்கூர் என்ற பெயரில் ஸ்பெஷல் டீம் இறங்கினர்.
அதன் முதற்கட்ட விசாரணையில் லேண்ட் ரோவர் டிஃபெண்டர், நிசான் பேட்ரோல் (patrol) வகை சொகுசு கார்களை மலையாள நடிகர்களான துல்கரும், பிருத்வியும் வாங்கியதாக தகவல் பெற்று கேரளா விரைந்தனர் சுங்கத்துறையினர்.
அப்படி, பிரத்விராஜ் வீட்டில் அதிரடி ரைட் நடத்தியதில் அங்கு எந்த வெளிநாட்டு கார்களும் சிக்கவில்லை. மற்றொரு டீம் கேரளா, பனப்பிள்ளி நகரில் இருக்கும் துல்கர் சல்மான் வீட்டில் ரைட் நடத்தியதில் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் டிஃபெண்டர் வகை உள்ளிட்ட இரு கார்கள் சிக்கியது.
கேரளா முழுவதும் 150 முதல் 200 வாகங்கள் இதுபோன்ற வாகனங்கள் இருப்பதாகவும் அதிகாரிகளின் முதல் நாள் சோதனையில் மட்டும் 36 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதில் துல்கருக்கு சப்ளை செய்த கும்பலுக்கும் அதிகாரிகள் இதன்மூலம் செக் வைத்துள்ளனர். இது தமிழ்நாட்டை சேர்ந்தவர்களும் சிக்குவார்களா? என்ற பரபரப்பை இந்த சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.