இறைவனடி சேர்ந்தார்..கொத்தித் தின்னும் கேவலப் பிறவியாக வாழ வேண்டுமா? இயக்குநர் பார்த்திபன் காட்டம்..
பார்த்திபன்
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராகவும் நடிகராகவும் திகழ்ந்து வரும் பார்த்திபன், சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்துக்கொண்டு சில பதிவுகளை பகிர்ந்து வருகிறார். அவரது எக்ஸ் தள பக்கத்தில் யூடியூப் வீடியோ லிங்க் என்றை பகிருந்துள்ளார். இந்த லிங்கில், சற்று முன் பரபரப்பு..பார்த்திபன் இறைவனடி சேர்ந்தார் என்று எழுத்தப்பட்டுள்ளது.
கேவலப் பிறவியாக
இதனை வைத்து இயக்குநர் பார்த்திபன் பகிர்ந்து கொண்ட அந்த பதிவில், "இது போன்ற செய்திகள் மரணமடைய வேண்டும். இதை தயாரிப்பவர்கள் தங்களின் வாய்க்கரிசிக்காக செய்தாலும், மற்றவர்களின் மனதை பிணமாக்கி அதை கொத்தித் தின்னும் கேவலப் பிறவியாக வாழ வேண்டுமா? என சம்மந்தப்பட்டவர்களின் குடும்பம், அது தாயோ தாரமோ பெற்றதுகளோ யோசிக்க வேண்டும்.
இது பல முறை, என்னை மட்டுமல்ல பலரையும் இறைவனடி சேர shortest route ticket வாங்கிக் கொடுத் திருக்கிறார்கள். அவர்களாகவே திருந்த அந்த சுடுகாட்டு சுடலை சாமியோ, ஆறாவது அறிவோ உதவ வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.
இதற்கு பலரும் இப்படியான இறப்பு பொய் வதந்தி செய்திகளால் உங்களுக்கு ஆயுள் அதிகரிக்கும் வேதனைப்பட வேண்டாம் என்று கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
இது போன்ற செய்திகள் மரணமடைய வேண்டும். இதை தயாரிப்பவர்கள் தங்களின் வாய்க்கரிசிக்காக செய்தாலும் …. மற்றவர்களின் மனதை பிணமாக்கி அதை கொத்தித் தின்னும் கேவலப் பிறவியாக வாழ வேண்டுமா? என சம்மந்தப் பட்டவர்களின் குடும்பம்>>> அது தாயோ தாரமோ பெற்றதுகளோ யோசிக்க வேண்டும். இது பல முறை, என்னை… pic.twitter.com/FiTpCkvh3o
— Radhakrishnan Parthiban (@rparthiepan) September 23, 2025