திரிஷாவுக்கே டஃப் கொடுப்பாரோ!! டிரெண்ட்டாகும் காந்தாரா ருக்மிணி வசந்த் லுக்..

Rukmini Vasanth Kantara: Chapter 1
By Edward Sep 24, 2025 08:30 AM GMT
Report

திரைத்துறையில் ஒவ்வொரு படம் வெளியாகும் போது அதில் நடித்துள்ள நடிகைகள், ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று டிரெண்ட்டாகிவிடுவார்கள். அப்படி பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த திரிஷாவின் குந்தவை கதாபாத்திரம் அனைவரது கவனத்தையும் பெற்றது.

இதனையடுத்து, மமிதா பைஜு இளசுகளின் கவனத்தை ஈர்த்தார். அவரை தொடர்ந்து கயாடு லோஹர் டிராகன் படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தெலுங்கில் நடிகை ஸ்ரீலீலா மவுசும் அதிகரித்தது.

திரிஷாவுக்கே டஃப் கொடுப்பாரோ!! டிரெண்ட்டாகும் காந்தாரா ருக்மிணி வசந்த் லுக்.. | Rukmini Vasanth Photo Viral Kantara Chapter 1

ருக்மிணி வசந்த்

தற்போது மதராஸி படத்தில் நடித்த ருக்மிணி வசந்த் தமிழ் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த ருக்மிணி வசந்தின் தந்தை வசந்த் வேணுகோபால், ஒரு ராணுவ வீரர். 2007ல் ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் இந்தியா பாகிஸ்தான் எல்லையில் நடந்த போரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அவருக்கு உயரிய விருதான அசோக் சக்ரா விருது வழங்கினர். ருக்மிணி வசந்தின் தாய் சுபாஷினி வசந்த் பரத நாட்டிய கலைஞராவார். போரில் கொல்லப்பட்டு கணவர் இல்லாமல் தவிக்கும் கைம்பெண்களை ஆதரிக்கும் ஒரு அறக்கட்டளையை நடத்தி வருகிறார் ருக்மிணியின் தாயார்.

டிரெண்ட்

ராணுவ பள்ளியில் படித்த ருக்மிணி வசந்த், மேற்படிப்பை லண்டனில் முடித்தார். 2019ல் கன்னடத்தில் வெளியான Birbal Trilogy என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகினார். இதன்பின் இந்தியில் அப்ஸ்டார்ட்ஸ் என்ற படத்தில் நடித்தார்.

திரிஷாவுக்கே டஃப் கொடுப்பாரோ!! டிரெண்ட்டாகும் காந்தாரா ருக்மிணி வசந்த் லுக்.. | Rukmini Vasanth Photo Viral Kantara Chapter 1

ருக்மிணிக்கு பரவலான அடையாளத்தை கொடுத்தது என்றால் அது ரக்ஷித் ஷெட்டி நடித்த Sapta Saagaradaache Ello – Side A’ மற்றும் Sapta Saagaradaache Ello – Side A படம் தான். குறிப்பாக முதல் பாகம் ஓடிடியில் நல்ல விமர்சனத்தை பெற்றதால் கன்னடம் தாண்டி மற்ற மொழி ரசிகர்களும் இப்படத்தினை பார்த்து பாராட்டினர்.

இதனால் இரண்டாம் பாகத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்து மிகப்பெரிய வெற்றியை கண்டனர். இதன்பின் பைராதி ரனகல் என்ற படத்தில் நடித்து தெலுங்கு ரசிகர்கள் மனதை ஈர்த்தார்.

காந்தாரா லுக்

விஜய் சேதுபதியின் ஏஸ் படத்தின் மூலம் அறிமுகமாகி சிவகார்த்திகேயனுடன் மதராஸி படத்தில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். தற்போது ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள காந்தாரா சாப்டர் 1 படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். வரும் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் டிரைலர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப்பெற்று வருகிறது. இப்படத்தில் ருக்மிணி வசந்தின் தோற்றம் தான் தற்போது டிரெண்ட்டாகி வருகிறது. பொன்னியின் செல்வன் படத்தின் குந்தவை திரிஷா லுக்கையே மிஞ்சும் அளவிற்கு ருக்மிணியின் பிரம்மாண்ட தோற்றம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்து வருகிறது.

GalleryGalleryGalleryGallery