பிரபல நடிகருக்கு மூன்றாம் மனைவியான சச்சின் பட நடிகை!

Marriage Bibasha Basu Karan Singh Grover
By Parthiban.A Feb 14, 2022 12:39 PM GMT
Report

சினிமா துறை பிரபலங்கள் இரண்டாவது மூன்றாவது திருமணம் செய்வதெல்லாம் இப்போது சாதாரணம் ஆகிவிட்டது. சமீப காலமாக நடிகர் தனுஷ் உள்ளிட்ட பல பிரபலங்களது விவாகரத்து அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பிரபல பாலிவுட் நடிகை பிபாஷா பாசு தான் கரண் சிங் குரோவருக்கு மூன்றாம் மனைவி ஆனது பற்றி ஒரு நிகழ்ச்சியில் பேசி இருக்கிறார். கரண் சிங் முதல் இரண்டு திருமணமும் ஒரு சில வருடங்களிலேயே விவகாரத்தில் முடிந்தது என்பதால் பிபாஷாவின் பெற்றோர் அவர்களது திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர்.

ஆனால் பிபாஷா அதற்கு முன் நடிகர் ஜான் ஆப்ரஹாம் உடன் 9 வருடமாக காதலில் இருந்தார். அந்த காதலே பிரேக்கப் ஆகிவிட்டது, கரண் திருமணம் விவகாரத்தானது எல்லாம் பெரிய மேட்டரே இல்லை என சொல்லி பிபாஷா திருமணம் செய்திருக்கிறார்.