பிக் பாஸ் 10-ல் கலந்துகொள்ள போகும் பிரபலங்கள்.. முழு லிஸ்ட் இதோ
பிக் பாஸ் 10
வருகிற செப்டம்பர் 6-ஆம் தேதி முதல் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் பிக் பாஸ் 10-வது சீசன் தொடங்கவுள்ளது.

பிரபலங்கள் லிஸ்ட்
இந்நிலையில், பிக் பாஸ் 10-ல் கலந்துகொள்ள போகும் பிரபலங்கள் குறித்த தகவல் ஒன்றின் பின் ஒன்றாக வெளியாகி வருகிறது. இதில், ஜனனி அசோக் குமார், புவி அரசு, ஹேமா ராஜ்குமார், ஆர்யன், பாடினி குமார், ஆல்யா மானசா, அக்ஷிதா அசோக் ஷபானா, நவீன் குமார் மற்றும் வினோத் பாபு ஆகியோர் கலந்துகொள்ளப்போவதாக கூறப்படுகிறது.

இவர்களுடன் குக் வித் கோமாளி பிரபலம் டாலியும் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி தரப்போவதாக பேச்சு அடிபடுகிறது. மேலும், ஓய்வுபெற்ற முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முரளி விஜய் இப்போட்டியில் பங்குபெற போவதாகவும் கூறப்படுகிறது.

பிரபல youtuber பிரஷாந்த், ஜாய் கிரீசிலடா ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப்போவதாக தகவல் வெளியாகியுள்ளன. இவர்களுடன் காமென் மேன் போட்டியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முனியம்மா, ஜேசன் மற்றும் கரிஷ்மா ஆகிய மூன்று நபர்கள் கலந்துகொள்ள போகிறார்களாம்.