3 நாட்களில் உலகளவில் 'ஹாய்' திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Nayanthara Kavin Box office Hi Movie
By Karthick Raja Aug 31, 2026 07:30 AM GMT
Report

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் கால்பதித்து மாபெரும் வெற்றி பெற்ற நட்சத்திரங்களில் ஒருவர் கவின்.

இவர் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் 'ஹாய்'. இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும், பாக்ஸ் ஆபிஸில் ஓப்பனிங் வாரத்தில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

3 நாட்களில் உலகளவில்

இந்நிலையில், 3 நாட்களில் 'ஹாய்' திரைப்படம் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் உலகளவில் 3 நாட்களில் ரூ. 7 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.